திங்கள், 30 நவம்பர், 2020

கட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி

 ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநில முதல் பெண் முதல்வருமான மெஹபூபா முப்தி, “ஜம்மு காஷ்மீரில் எதிர்ப்பு குரல்கள் நசுக்கப்படுவதாகவும், ஜனநாயகமற்ற சூழலை பாஜக உருவாக்கி வருவதாகவும்  குற்றம் சாட்டினார்”.

மெஹபூபா முப்தி,“அவர்கள் என்னை முடக்க நினைக்கிறார்கள். எனது கட்சியை தடை செய்ய விரும்புகிறார்கள். வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370- ஐ ரத்து செய்தது குறித்து தொடர்ச்சியாக நான்  பேசி வருவதாக கூறுகிறார்கள். ஆனால், நான்  வேறு என்ன செய்ய முடியும்? ” என்று கேள்வி எழுப்பினார்.

வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு முப்தியின் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புல்வாமா மாவட்டத்தில், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் (DDC) தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்த மூன்றே நாட்களில் மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி தலைவர் வஹீத் உர் ரெஹ்மான் பாராவை தேசிய விசாரணை முகமை  கைது செய்தது. வாகீத்-உர்-ரஹ்மான் குடும்பத்தினரை சந்திக்க புல்வாமாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தத மெஹபூபா முப்தியை காவல்துறை தடுத்து நிறுத்தினர். .

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முப்தி தெரிவித்தார். எவ்வாறாயினும், ​​ஜே & கே காவல்துறை இதை மறுத்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பயணத்தை ஒத்திவைக்குமாறு கோரப்பட்டதாக தெரிவித்தனர். முப்தி தனது இல்லத்தில் இருந்து  ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

“முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள், சீக்கியர்கள்  காலிஸ்தானியர்கள், சமூக ஆர்வலர்கள் நகர்ப்புற நக்சல்கள், மாணவர்கள் சமூக விரோதிகள் ” என்று  பாஜக முத்திரை குத்துவதாக முப்தி குற்றம் சாட்டினர்.

“நாட்டில் அனைவரும் பயங்கரவாதிகள் என்றால், பின்பு  யார் தான் இந்துஸ்தானியார்கள் என்று எனக்கு புரியவில்லை. பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மட்டும் தான் இந்தியர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

“370 வது பிரிவை மீண்டும் நிலைநிறுத்தாத வரை பிரச்சினை தீர்க்கப்படாது. வெறுமனே தேர்தல்களை நடத்துவது பிரச்சினைக்கு தீர்வாகாது, ”என்றும் தெரிவித்தார்.