வெள்ளி, 6 நவம்பர், 2020

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சர்ச்சையில் முடிந்தால் என்ன நடக்கும்?

 What might happen if the US election 2020 result is disputed? :  அமெரிக்க அதிபரை உறுதி செய்யும் சில முக்கியமான தேர்தல் களங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவராத நிலையில் புதன்கிழமை அன்று அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் தான் வெற்றி பெற்றுவிட்டதாக கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.

இந்த முன்முதிர்ச்சியற்ற செயல்பாடுகள், பல நாட்களாக ஜனநாயக கட்சியினர் ட்ரெம்ப் தேர்தல் முடிவுகளில் ஏதேனும் சர்ச்சையை கிளப்புவார் என்று பலவாரங்களாக வெளிப்படுத்திய அச்சத்தை உறுதி செய்தது. நீதிமன்றம், காங்கிரஸ் மற்றும் மாநில அரசியல்வாதிகள் ஆகியோர்கள் இணைந்து அதிபரை முடிவு செய்வதற்கான சில சட்டரீதியான, அரசியல் ரீதியான நாடகங்கள் நடைபெறும் என்ற கருத்து பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.


தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கும் பல்வேறு வழிமுறைகள் கீழே

வழக்குகள்

ஆரம்ப கால வாக்கு தரவுகள் ஜனநாயக கட்சியினர் குடியரசு கட்சியினரைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர் என்பது உறுதியாகிறது. பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் போன்ற மாகாணங்களில் தேர்தல் நாள் வரை தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை. அங்கு ஆரம்ப கட்ட தேர்தல் முடிவுகள் ட்ரெம்பிற்கு ஆதரவாக இருந்தது ஏன் என்றால் அங்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை மிகவும் மெதுவாக நடைபெற்றது. ஜனநாயக கட்சியினர், ட்ரெம்ப் புதன்கிழமை செய்தது போன்றே, தபல்வாக்குகள் எண்ணி முடிக்கப்படுவதற்குள் வெற்றியை அறிவிப்பார் என்று அச்சம் தெரிவித்தனர். இது போன்ற சூழலில் மிகவும் முக்கியமாக கருதப்படும் மாகாணங்களில் வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்ய வழி வகை செய்யும். ஒவ்வொரு மாகாணத்திலும் பதியப்படும் வழக்குகள் இறுதியில் உச்ச நீதிமன்றத்தை எட்டும். 2000ம் ஆண்டில் உயர் நீதிமன்றம் மறு எண்ணிக்கையை நிறுத்திய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளர் ஜார்ஜ் புஷ் , ஜனநாயக கட்சி வேட்பாளரான அல் கோரேவை 537 வாக்குகள் வித்தியாசத்தில் ஃப்ளோரிடாவில் வென்றார்.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் எமி கோனி பாரெட்டை உச்ச நீதிமன்ற நீதிபதியாக டிரம்ப் நியமித்தார், 6-3 கன்செர்வேட்டிவ் பெரும்பான்மையை உருவாக்கி, தேர்தலில் எடைபோட்டால் அது ட்ரெம்பிற்கு சாதகமாக இருக்கும்.

தேர்தல் சட்டங்கள், முறையாக அனைத்து வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என்று தெளிவாக கூறும் நிலையில் சட்டம் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். அதனால் நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்கின்றோம். நாங்கள் அனைத்து வாக்குகளையும் நிறுத்துகின்றோம் என்று ட்ரெம்ப் புதன்கிழமை கூறினார். சில மாகாணங்களில் தபால்வாக்குகளை எண்ண அதிக நேரம் பிடிக்கும்.

எலெக்ட்ரோல் காலேஜ்

அமெரிக்க அதிபர் பெரும்பான்மையான மக்கள் வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை. அரசியல் சாசனத்தின் கீழ் எலெக்ட்ரோல் காலேஜ் என்று அழைக்கப்படும் 538 எலெக்டர்களில் பெரும்பான்மை பெரும்பவர் அடுத்த அதிபராவார். 2016ம் ஆண்டு தேசிய பாப்புலர் வாக்குகளை ஹிலாரியிடம் தோற்றார் ஆனால் 304 எலெக்ட்ரோல் வாக்குகளை அவர் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

ஒவ்வொரு மாகாணத்தின் பாப்புலர் வாக்குகளை பெறும் வேட்பாளர் அந்த மாகாணத்தின் வாக்குகளை பெறுகிறார். இந்த ஆண்டு எலெக்ட்ரஸ் டிசம்பர் 14ம் தேதி வாக்களிக்க சந்திக்க உள்ளனர். காங்கிரஸின் இரண்டு சபையும் கூடி வாக்குகளை எண்ணி, வெற்றியாளரை தீர்மானிக்கும். பொதுவாக ஆளுநர்கள் தத்தம் மாகாணத்தின் தேர்தல் முடிவுகளை காங்கிரஸிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் சில கல்வியாளர்கள் ஆளுநரும் சட்டமன்றமும் நெருக்கமாக போட்டியிடும் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு தேர்தல் முடிவுகளை சமர்ப்பிக்கும் ஒரு காட்சியை கோடிட்டுக் காட்டியுள்ளனர். பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் வட கரோலினா ஆகிய மாகாணங்களில் அனைத்தும் ஜனநாயக ஆளுநர்கள் மற்றும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டமன்றங்களைக் கொண்டுள்ளன.

சட்ட வல்லுநர்கள், இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் ஆளுநர்களில் தேர்தல் தொகுதியை ஏற்க வேண்டுமா அல்லது மாநிலத்தின் தேர்தல் வாக்குகளை எண்ணவில்லையா என்பது தெளிவாக இல்லை என்று கூறியுள்ளனர். இது போன்ற நிலை சாத்தியமில்லை என்று பல வல்லுநர்கள் கருதினாலும், வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஃப்ளோரிடா சட்டமன்றம் 2000ம் ஷ் மற்றும் கோருக்கு இடையிலான போட்டியை உச்ச நீதிமன்றம் முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டில் தனது சொந்த வாக்காளர்களை சமர்ப்பிக்க பரிசீலித்தது. 1876ம் ஆண்டில், மூன்று மாகாணங்கள் டியூலைங் எலெக்ட்ரஸை நியமித்து, 1887 இல் தேர்தல் எண்ணிக்கை சட்டத்தை (ஈ.சி.ஏ) நிறைவேற்ற காங்கிரஸைத் தூண்டியது.

இந்த சட்டத்தின் கீழ், ஒவ்வொரு காங்கிரஸ் சபையும், எந்த எலெக்டர்களை தேர்வு செய்வது என்பதை தனித்தனியாக தீர்மானிக்கும். தற்போது குடியரசு கட்சியினர் செனெட் சபையையும், ஜனநாயக கட்சியினர் பிரதிநிதிகள் சபையையும் ஆக்கிரமித்துள்ளனர். ஆனால் தேர்தல் எண்ணிக்கை புதிய காங்கிரஸால் நடத்தப்படுகிறது, இது ஜனவரி 3 ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. இரண்டு சபைகளும் உடன்படவில்லை என்றால், என்ன நடக்கும் என்பது முற்றிலும் தெளிவாக இல்லை.

ஒவ்வொரு மாகாணத்தின் “நிர்வாகி”ஆல் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர்கள் வெற்றிபெற வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. பல அறிஞர்கள் அதை மாகாண ஆளுநர் என்று விளக்குகிறார்கள், ஆனால் மற்றவர்கள் அந்த வாதத்தை நிராகரிக்கிறார்கள். இந்த சட்டம் ஒருபோதும் நீதிமன்றங்களால் சோதிக்கப்படவில்லை அல்லது விளக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் நெட் ஃபோலே, ஈ.சி.ஏவை கிட்டத்தட்ட அசாத்தியமானது என்று 2019ம் ஆண்டு, எலெக்ட்ரோல் காலேஜ் சர்ச்சையை அலசும் ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

ஃபோலேயின் பகுப்பாய்வு படி, செனெட் அதிபராக இருக்கும், ட்ரெம்பின் துணை அதிபர், இரண்டு சபைகளும் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ஒரு மாகாணத்தின் சர்ச்சைக்குரிய அனைத்து வாக்குகளையும் மொத்தமாக வெளியேற்ற முயற்சிக்கலாம். இந்த விவகாரத்தில், எலெக்ட்ரோல் காலேஜ் ஆக்ட், வேட்பாளர் 270 வாக்குகளை பெற வேண்டுமா என்பதை உறுதியாக கூறவில்லை.

2000 ஆம் ஆண்டு சர்ச்சையின் போது புஷ் பிரச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் பெஞ்சமின் கின்ஸ்பெர்க், அக்டோபர் 20 அன்று ஒரு மாநாட்டு அழைப்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த சட்டங்கள் எதுவும் இதற்கு முன்னர் அழுத்தமாக சோதிக்கப்படவில்லை என்று சொல்வது தான் நியாயமாக இருக்கும் என்று அவர் கூறினார். எந்தவொரு காங்கிரஸின் முட்டுக்கட்டையையும் தீர்க்க கட்சிகள் உச்சநீதிமன்றத்தை கேட்கலாம், ஆனால் காங்கிரஸ் தேர்தல் வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும் என்பதை கூறுவதற்கு நீதிமன்றம் தயாராக இருக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

தேர்தல்

இரண்டு வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளை பெறவில்லை என்றால், 12வது அரசியல் சாசன திருத்தத்தின் கீழ் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அப்போது பிரதிநிதிகள் சபை அதிபரையும், செண்ட் சபை துணை அதிபரையும் தேர்வு செய்யும். சபையில் இருக்கும் ஒவ்வொரு மாகாணமும் ஒரு வாக்கினை வைத்துள்ளது. தற்போது குடியரசு கட்சியினர் 26 பேர் அங்கு உள்ளனர். ஜனநாயக கட்சியினர் 22 நபர்களும் உள்ளனர். தேர்தலுக்குப் பிறகு 269-269 சமமான நிலை ஏற்பட்டால் மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது; 2020 இல் இப்படியான சூழல் உருவாக சில வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜனவரி 20, தற்போதைய அதிபரின் பதவிக்காலம் முடிவடையும் என்று அரசியலமைப்பு ஆணையிடும் போது, காங்கிரசில் எந்தவொரு தேர்தல் சர்ச்சையும் ஒரு கடுமையான காலக்கெடுவுக்கு முன்னதாகவே இருக்கும்.

Presidential Succession சட்டத்தின் கீழ் காங்கிரஸ் அன்று வரை அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்வு செய்யவில்லை என்றால், சபையின் சபாநாயகர் ஆக்டிங் பிரெசிடெண்ட்டாக செயல்படுவார். தற்போது கலிஃபோர்னியாவை சேர்ந்த டெமாக்ரேட் கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி சபாநாயகராக உள்ளார்.