ஞாயிறு, 29 நவம்பர், 2020

கர்நாடகாவில் சாதி அடிப்படையில் வாரியங்கள் அமைப்பதன் பின்னணி அரசியல் என்ன?

 The politics of creating community-based corporations in Karnataka : கர்நாடகாவில் ஆட்சி அமைத்திருக்கும் பாஜக அரசு சமீபத்தில் மூன்று வாரியங்கள் மற்றும் கார்ப்பரேசன்களை அமைத்து குறிப்பிட்ட சாதிகள் மற்றும் மொழி பிரிவினரின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து மேற்பார்வையிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த மேம்பாட்டு கார்ப்பரேசனில் லிங்காயத்து வீரசைவ பிரிவும் அடங்கும் (முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவும் இந்த பிரிவை சேர்ந்தவர்)

லிங்காயத்து பிரிவினருக்கு கார்ப்பரேசன் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முடிவுவை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அந்த கட்சியின் வாக்குகளை பெறுவதற்காக எடியூரப்பா இவ்வாறு செய்வதாக அவர் குற்றம் சுமத்தினார். கர்நாடக மக்கள் தொகையில் 17% பேர் இந்த பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் பாஜக மற்றும் எடியூரப்பாவின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். மத்திய அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு பெறும் வகையில் லிங்காயத்து பிரிவை இணைக்க எடியூரப்பா மேற்கொண்ட முயற்சியும் கூட அந்த பிரிவின் ஆதரவை பெற எடியூரப்பா மேற்கொண்ட முயற்சியாகும் என்று கருதப்படுகிறது.

சாதி அடிப்படையில் மேம்பாட்டு வாரியங்கள் அமைக்க காரணம் என்ன?

சாதி மற்றும் மத குழுக்களின் மேம்பாட்டிற்காக கார்ப்பரேசன்கள் மற்றும் வாரியங்கள் அமைப்பது அக்குழு மக்களின் அரசியல் ஆதரவுகளை பெற பின்பற்றப்படும் ஒரு தந்திரமாகும். லிங்காயத்து பிரிவினருக்கான ஆதரவு தான் கர்நாடகாவின் சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளில் 90 இடங்களில் வெற்றி பெற உதவியது. இவர்கள் வடக்கு கர்நாடகாவில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.  லிங்காயத்து வீர சைவ மேம்பாட்டு கார்ப்பரேசன் ரூ 500 கோடி நிதியில், ஸ்காலார்ஷிப் மற்றும் கடன்கள தர, உருவாக உள்ளது. இரண்டு தொகுதிகளுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் (பசவகல்யாண் மற்றும் மஸ்கி) மற்றும் ஒரு மக்களவை இடைத்தேர்தல் (பெலகவி) காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மூன்று இடங்களும் வடக்கு கர்நாடகாவில் லிங்காயத்து பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளாகும். மராத்தா மொழி பேசும் மக்களுக்காக மராத்தா மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானவுடன் இந்த அறிவிப்பும் வெளியானது. மராத்தி பேசும் மக்களின் வாக்குகளை பெறவே இந்த அறிவிப்பும் வெளியானது. பெலகவி மற்றும் பசவகல்யாண் பகுதிகளில் மராத்தி பேசும் மக்கள் அதிகமாக உள்ளனர்.

இந்துத்துவ குடையின் கீழ் அனைத்து சாதிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியை பாஜக மேற்கொண்டுள்ள போதிலும், கடலோர கர்நாடக பிராந்தியத்திற்கு அப்பால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை – 1990களில் இருந்து இந்துத்துவா மற்றும் மத துருவமுனைப்பு ஆகியவை தேர்தல்களில் முக்கிய செல்வாக்கு செலுத்தியுள்ளன, குறிப்பாக பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பின்னர். பாஜக இன்னும் கர்நாடகாவில் ஒரு தனிப் பெரும்பான்மையை வெல்லவில்லை, 2008 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தனது பெரும்பான்மையை நிலைநாட்ட மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுவதை நம்ப வேண்டியிருக்கிறது.

இது போன்ற வாரியங்கள் மற்றும் கார்ப்பரேசன்கள் தேர்தலில் வெற்றி பெற உதவுமா?

இதற்கு முன்பு பாஜக வெற்றியே பெறாத சிரா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பாஜக காடு கொல்லா பட்டியல் இனத்தவர்களுக்கு மேம்பாட்டு வாரியம் ரூ. 10 கோடியில் உருவாக்கப்படும் என்று கூறியது. இந்த அறிவிப்பு பாஜகவை அங்கு முதன்முறையாக வெற்றி பெற வைத்தது. மற்ற அனைத்து கட்சிகளும் வெக்கலிக சமூகத்தை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தியது. ஆனால் பாஜக இது போன்ற பட்டியல் இன மக்கள் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்கள் மீது கவனத்தை செலுத்தியது.

லிங்காயத்து வீர சைவ கார்ப்பரேசனை உருவாக்குவதற்கு வேறேனும் பெரிய அரசியல் முக்கியத்துவம் உள்ளதா?

கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்க போகின்றார்கள் என்பதை முடிவு செய்யும் ஒரு பிரிவினராக இவர்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் எடியூரப்பா மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கின்றனர். 2013ம் ஆண்டு தேர்தலின் போது பாஜக 110 இடங்களில் இருந்து 40 இடங்களுக்கு தள்ளப்பட்டது. அப்போது பாஜகவில் இருந்து விலகி தனியாக போட்டியிட்டார் எஇயூரப்பா. அந்த கட்சியும் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

2018ம் ஆண்டு மீண்டும் பாஜகவில் எடியூரப்பா இணைந்த போது 104 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் லிங்காயத்து பிரிவினரின் வாக்குகளை பெற கடுமையான முயற்சி மேற்கொண்டது. லிங்காயத்து வீர சைவ மேம்பாட்டுக் கழகத்தின் உருவாக்கம் எடியூரப்பாவின் செல்வாக்கை பலப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக மட்டுமல்லாமல், அரசாங்க வேலைகள் மற்றும் கல்வியில் லிங்காயத்துகளுக்கு 16% இடஒதுக்கீடு வழங்குவதற்கான கோரிக்கையை பரிசீலிப்பதற்கான ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.


கடந்த காலங்களில் இந்த யுக்தியை மற்ற கட்சிகள் எப்படி பயன்படுத்தின?

அனைத்து கட்சிகளும் சாதி உட்பிரிவினருக்கும், மத குழுவினருக்கும் வாரியங்கள் மற்றும் கார்ப்பரேசன்களை உருவாக்கியது. சமூகத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பிரிவினரை சாதி மற்றும் இன அடிப்படையில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2013 – 2018 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முடிவுகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும் இல்லை அதை பயன்படுத்தி மேம்பாட்டு திட்டங்களும் உருவாக்கப்படவில்லை.

டி. தேவராஜ் உர்ஸ் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கார்ப்பரேசன், டாக்டர் அம்பேத்கார் மேம்பாட்டு கார்ப்பரேசன், சிறுபான்மையிண்டர் மேம்பாட்டு கார்ப்பரேசன் ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது. மேம்பாட்டு திட்டங்களை உருவாக்கவே இவை உருவாக்கப்பட்டது. இதே போன்று பல சாதிகளுக்கும் கார்ப்பரேசன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெ.டி.எஸ். கட்சி தலைவர் எச்.டி. குமாரசாமி பிராமணர் மேம்பாட்டு வாரியத்தை ரூ. 25 கோடியிலும், ஆர்ய வைஷ்ய மேம்பாட்டு வாரியத்தை ரூ. 10 கோடியிலும் உருவாக்க இருப்பதாக அறிவித்தார்.

முன்னால் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா போவி மேம்பாட்டு கார்ப்பரேசன், பாபு ஜகாஜீவன் ராம் மடிகா, கர்நாடகா தண்டா மேம்பாட்டு கார்ப்பரேசன் மற்றும் நிஜ்ஷரணா சம்பிகரா சௌவ்டைய்யா மேம்பாட்டு கார்ப்பரேசன் ஆகியவற்றையும் உருவாக்கினார்.