புதன், 18 நவம்பர், 2020

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் : முக்கிய குற்றவாளி பட்டியலிட்ட பெயரில் கமல்நாத் மகன்!

 Agusta Westland Deal: Statement of key accused mentions Kamal Nath’s son, Khurshid, Patel, web of offshore firms :ரூ. 3000 கோடி மதிப்பிலான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட சார்ட்டர்ட் கணக்காளர் ராஜீவ் சக்‌ஷேனாவை விசாரணை செய்ததில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் உறவினர் மட்டுமில்லாமல் மகன் பகுல் நாத், காங்கிரஸ் தலைவர்கள் சல்மான் குர்ஷித், மற்றும் அகமது படேல் ஆகியோரின் பெயர்களையும் அவர்க் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துபாயில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட சக்‌ஷேனா தற்போது ஜாமீனில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பாக ரூ. 385 கோடியை இணைத்து விசாரணையை மும்முரப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை. வழக்கின் உண்மைகளை முழுமையாக வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டில் சக்சேனா தனது ஒப்புதல் நிலையை விலக்கிக் கொள்ளும் முயற்சியில் ED இப்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

சக்சேனாவின் 1000 பக்கத்திற்கும் மேலான அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய வங்கி அறிக்கைகள், வெளிநாட்டு நிறுவனங்களின் தகவல்கள், முக்கிய நபர்களுக்கு இடைப்பட்ட மின்னஞ்சல் கடிதங்கள் ஆகியவற்றையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது. இவற்றில் பல ஹவாலா பரிவர்த்தனைகளும் சிக்கலான வெளிநாட்டு கட்டமைப்புகளும் இருப்பதை உறுதி செய்கிறது.

சக்சேனாவின் இண்டெர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் மற்றும் க்ளோபல் சர்வீசஸ் இரண்டையும் க்றிஸ்டியன் மைக்கேல் என்பவர் வைத்திருந்தார். அவர் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டு இன்று வரை ஜெயிலில் உள்ளார். அதனை தொடர்ந்து சக்சேனாவின் அறிக்கையின் மையப்புள்ளியானது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்ததிற்கு எதிராக எவ்வாறு எதிர்ப்புகள் கிளம்பியது என்பதை கூறுகிறது. (இது யுபிஏ II அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது).

இந்த ஊதியங்கள் அன்றைய காலத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளில் இருக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் சில நிதிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ கட்டமைக்கப்பட்ட பரிவர்த்தனைகளாக வழங்கப்பட்டது. சில கட்டமைப்புகளை நானே வழங்கினேன். சில கட்டமைப்புகள் இந்தியாவில் முதலீடுகளாக மாறியது என்று கூறினார் சக்சேனா. செப்டம்பர் 17 அன்று தாக்கல் செய்யப்பட்ட அதன் சமீபத்திய துணை குற்றப்பத்திரிகையில், சிபிஐ 2000 ஆம் ஆண்டில், இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸின் 99.9% பங்குகளை சக்சேனா வாங்கியதாகக் கூறியுள்ளது.

இத்தாலி மற்றும் மொரீசியஸில் வந்த லெட்டர்களை குறிப்பிட்டு காட்டிய குற்றப்பத்திரிக்கையில் சக்சேனா கௌதம் கைத்தனுடன் இணைந்து இண்டெர்ஸ்டெல்லர் டெக்னாலஜீஸ் 12.40 மில்லியன் யூரோக்களை அகஸ்டா வெஸ்ட்லேண்டிடம் இருந்து பெற்றது குறிப்பிடப்பட்டுள்ளது. இது “இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் சந்தேகிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு பணம் செலுத்துவதற்காக மேலும் திசைதிருப்பப்பட்டது.

மேலும் இதில் சக்சேனா வைத்திருக்கும் நான்கு நிறுவனங்களான பசிஃபிக் இண்டெர்நேசனல், மிடாஸ் மெட்டல்ஸ் இண்டெர்நேசனல் எல்.எல்.சி, மெடோலிக்ஸ் லிமிட்டட் மற்றும் யூரோட்டிரேட் லிமிட்டட் ஆகியவற்றிற்கு மொத்தமாக 9,48,862 யூரோக்கள் வழங்கப்பட்டிருப்பதையும் மேற்கோள் காட்டியுள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய இரண்டு நபர்களான டிஃபென்ஸ் டீலர் சுஷேன் மோகன் குப்தா மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத்தின் உறவினர் ரதுல் பூரியின் நிதி பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் செலுத்துகிறது சக்சேனா சமீபத்திய விசாரணை.

குப்தா மற்றும் பூரி காவலில் வைக்கப்பட்டு பின்பு தற்போது ஜாமீனில் உள்ளனர். சக்சேனா, குப்தா மற்றும் கைத்தன் பெயர்களை வெளியிடுவதில் கில்லாடிகள் என்று கூறியுள்ளார். அவர்கள் மிகவும் முக்கியமான தலைவர்களின் பெயர்களை அடிக்கடி தங்களின் உரையாடலில் வெளியிட்டு, தங்களுக்கு அதிகாரத்தில் இருக்கும் செல்வாக்கை வெளிப்படுத்த விரும்புவார்கள். சல்மான் குர்ஷித் மற்றும் கமல் மாமா ஆகியோர் பெயர்களை அடிக்கடி அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்று சக்சேனா குற்றம் சாட்டியுள்ளார்.

அகஸ்டா நிறுவனத்தில் இருந்து அதிகம் பெற இருக்கும் நிறுவனங்களில் இண்டெர்ஸ்டெல்லர் நிறுவனமும் ஒன்று என்பதை நான் நன்றாக அறிவேன். இந்த நிறுவனம் சுஷென் மோகன் குப்தாவிற்கு சொந்தமானது. கௌதம் கைத்தானால் இது நிர்வகிக்கப்பட்டது. சுஷன் மோகன் குப்தாவுடனான சந்திப்பில் அடிக்கடி அவர்கள் இதன் மூலம் ஆதாயம் அடையும் அரசியல்வாதிகள் குறித்து அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர். ஏ.பி. என்று அவர்களால் குறிப்பிடபப்ட்டது அகமது படேலைக் குறிக்கும் என்றார் சக்சேனா.

அரசியல் தொடர்புகளுக்கு பணம் அனுப்ப அவரால் உருவாக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பு வழியாகவோ அல்லது துபாயை தளமாக கொண்டு செயல்படும் அவரின் நிறுவனம் மூலமாகவோ ரதுல் பூரியின் மோசர் பவர் லிமிட்டட் நிறுவனத்திற்கு ஆப்டிமா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் மூலம் நிதி செலுத்தப்பட்டது.

ப்ரிஸ்டைன் ரிவர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்துடனான நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்தினார். நாங்கள் ப்ரிஸ்டைன் ரிவர் இன்வெஸ்ட்மெண்ட் மூலமாக ப்ரிட்ஜ் நிதியை பெற்றோர்ம். இந்த நிறுவனம் பகுல் நாத்திற்காக ஜான் டோசெர்ட்டி நடத்தி வந்தார். எனவே, பிரிஸ்டைன் ரிவர் இன்வெஸ்ட்மென்ட்ஸில் இருந்து கடன்களை திருப்பிச் செலுத்த இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் மற்றும் குளோபல் சர்வீசஸ் ஆகியவற்றின் மறைமுக நிதியாக பயன்படுத்தப்பட்டது.

எனது மருமகன் ரதுல் பூரியின் நிறுவனங்களுடனோ அல்லது பரிவர்த்தனைகளுடனோ எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று நான் முன்பு கூறியுள்ளேன். எனது மகன் பாகுல் நாத்தை பொறுத்தவரை, அவர் துபாயில் வசிக்கும் ஒரு என்.ஆர்.ஐ. அவர் ப்ரிஸ்டைன் ரிவர் நிறுவனத்தின் நன்மை பயக்கும் உரிமையாளர் என்று பேசப்படுவதை பற்றி நான் கேள்விப்பட்டேன். நான் என் மகனிடம் பேசியபோது, ​​அந்நிறுவனம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். அவருடனான தொடர்பை நிரூபிக்கும் ஆவணங்கள் அல்லது வங்கி கணக்குகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். யார் வேண்டுமானாலும் ஒருவர் ஒரு நிறுவனத்தை துவங்கி ஒருவரின் பெயரை நன்மை பயக்கும் உரிமையாளராக வைக்கலாம், அவருக்கு அதனை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. அவருக்கு இது குறித்து ஏதும் தெரியாது” என்று கமல்நாத்திடம் பேசிய போது அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் இவ்வாறு தெரிவித்தார்.

குர்ஷித்திடம் கேட்ட போது, என்னுடைய பெயர் இதில் இடம் பெற்றிருப்பது குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். தேவ் மோகன் குப்தா, சூசன் மோகன் குப்தாவின் தந்தை என்னுடைய நெருங்கிய குடும்ப நண்பர். நான் அவருடைய நலவிரும்பி. அவரை நன்றாக தெரியும் என்றாலும் ரதுல் பூரி அல்லது ராஜீவ் சக்சேனா போன்று இந்த வழக்கில் கூறப்பட்டிருக்கும் நபர்கள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார்.

சுவாரஸ்யமாக, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமலாக்கத்துறையால் அவரது மனைவி ஷிவானி சக்சேனா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரதுல் பூரி தன்னை துபாயில் சந்தித்ததாக சக்சேனா ஒப்புக் கொண்டார்.

சந்திப்பின் போது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் கிக்பேக்குகளுடன் இணைக்கப்பட்ட குளோபல் சர்வீசஸிலிருந்து பணம் அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்களை சக்சேனா காட்டினார் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். ரதுல் பூரி தனக்கு கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸை தெரியாது என்று கூறினார், ஆனால் இந்த பரிவர்த்தனைகள் அவரது ஹவாலா ஆபரேட்டர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன… அவர் துபாய் வந்ததிலிருந்து எந்தவொரு விஷயத்திலும் தனது தந்தை அல்லது மாமாவை இணைக்கும் எந்த ஆவணம் / தகவல் / அறிக்கையையும் கொடுக்க வேண்டாம் என்று எனக்கு செய்திகளை அனுப்பினார்.

பூரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, “பாதுகாப்பு, பாதுகாப்பு கொள்முதல் அல்லது ஆயுதங்கள் தொடர்பான எந்தவொரு வியாபாரத்திலும் நான், எனது தனிப்பட்ட திறனில் அல்லது எனது நிறுவனத்தின் மூலம் ஈடுபடவில்லை. நாங்கள் பல்வேறு நாடுகளில் பல வணிகங்களை இயக்குகின்றோம். சொந்தமாக நடத்தவும் செய்கின்றோம். தேவையான உள்ளூர் விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் இந்தியா தொடர்பான சட்டங்கள் என அனைத்திற்கு நாங்கள் இணங்குகின்றோம். விஷயம் நீதிமன்றத்தில் இருப்ப்தால் நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது” என்று அவர் கூறினார்.