செவ்வாய், 3 நவம்பர், 2020

தேவைப்பட்டால், வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த தயார்: விக்கிரமராஜா

 தேவைப்பட்டால், வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய வேளாண் சட்டத்தால் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதனால், வெங்காயம் போன்று மற்ற பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளதாகவும், எனவே, அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் தேவைப்பட்டால், வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராட்டம் நடத்த தயாராக உள்ளதாகவும் விக்கிரமராஜா தெரிவித்தார்.