ஞாயிறு, 22 நவம்பர், 2020

திராவிடக் கட்சிகளுக்கு ‘டஃப்’ கொடுக்குமா பாஜக?

 

Source: https://tamil.indianexpress.com/explained/where-does-the-bjp-stand-in-tamil-nadu-233066/ 

தமிழகம் சுமார் ஆறு மாதங்களில் தேர்தலை சந்திக்கப்போகிறது. பாஜகவின் உயர்மட்ட தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இந்த வார இறுதியில் (நவம்பர் 21) தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.

பாஜக தனது தேசியவாத கருத்துக்களுடன் தமிழகத்தில் தேர்தல் அரசியலை கைப்பற்ற பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. ஒரு சில நகர்ப்புற, உயர் வர்க்க பிரிவுகளைத் தவிர, நிலமும் மொழியும் எப்போதும் சாதாரண தமிழ் வாழ்வின் பிரிக்க முடியாத நிறுவனங்களாக இருந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த இரண்டு கலாச்சார நிறுவனங்கள்தான் திராவிடக் கட்சிகளின் மாநிலத்தில் காவியின் பயணத்தை கடினமாக்குகின்றன.

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் வந்த மாதங்களில், மாநிலத்தில் பல அசாதாரண நிகழ்வுகளை பாஜக வெற்றிகரமாக நடத்தியதாக அல்லது திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது:

அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் கிளர்ச்சியின் மூலம் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதனால், அவரை அதிமுகவுடன் இணைக்க தொழிலதிபர்கள், அதிகார மையத்தினர் மற்றும் மூத்த அமைச்சரவை உறுப்பினர்களை குறிவைத்து மத்திய நிறுவனங்கள் தொடர்ச்சியாக அதிரடி சோதனைகளை நடத்தியது. மேலும், அதிமுகவில் இரு பிரிவுகளை இணைத்ததோடு ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து வெளியேற்றுவதை உறுதி செய்தது.

இந்த நிகழ்வுகளின் விளைவாக, முரட்டுத்தனமான தேசியக் கட்சியைக் கையாளும் திறன் இல்லாததால், அதிமுக தலைவர்கள், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவை தங்கள் கூட்டணியில் இணைத்துச் செல்ல வைத்தது. இருப்பினும், இந்த முடிவுக்கு அது ஒரு பெரிய விலையை செலுத்த வேண்டியிருந்தது. அதிமுக 39 மக்களவை இடங்களில் 38 இடங்களை இழந்தது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களித்தபோதும், 22 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக சிறப்பாக செயல்பட்டது. அவற்றில், 9 இடங்களை அதிமுக வெற்றி பெற்றது. அது எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழப்பதில் இருந்து காப்பாற்றியது.

2016 சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி கட்சிகளான சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய மூன்று கட்சிகளைவிட பா.ஜ.க 2.86 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு பின்னடைவை அளித்திருந்தாலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 5 முதல் 10 சட்டசபை இடங்களை வெல்லும் என்று கட்சித் தலைமை நம்புகிறது.

கூட்டணியில் பனிப்போர்

அதிமுக தலைமை பல விஷயங்களில் பாஜகவுக்கு கடுமையான முகத்தை தொடர்ந்து காட்டுகிறது. அண்மையில், தமிழ் இந்து கடவுளான முருகனின் ஆறு படைவீடு கோயில்களைப் பார்வையிட்டு கொண்டாடும் ரத யாத்திரையை மாதிரியாகக் கொண்ட ஒரு பேரணியை மாநிலத்தில் ஒரு மாத காலத்திற்கு ‘வேல் யாத்திரை’ நடத்த பாஜகவின் மிகைப்படுத்தப்பட்ட முயற்சியை அதிமுக தடுத்தது.வேல் யாத்திரைக்கு எதிரான தடையை மீற முயற்சிக்கும் பாஜக தலைவர்கள் இன்னும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, அதிமுகவின் செய்தித்தாளான நமது அம்மா, பாஜகவை இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்திய வீடியோவை வெளியிட்டு குண்டர் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட யூடியூப் சேனலான கருப்பர் கூட்டத்துடன் ஒப்பிட்டது. மூத்த அதிமுக தலைவர்கள் பல அறிக்கைகளில், மாநிலத்தில் வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டுவதற்கான எந்த முயற்சியும் அனுமதிக்கப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தினர். இது அவர்களின் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு விடுக்கப்பட்ட தெளிவான செய்தி ஆகும். திராவிட பெரும்பான்மை பாஜகவுக்கும் அவர்களின் மாநில தலைமைக்கும் எதிராக தொடர்ந்து வலிமையை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

மாநிலத்தில் பாஜக வளர்வது தெரிகிறது

பாஜகவுக்கு தமிழகம் ஒரு கடினமான நிலப்பரப்பாகத் தொடர்ந்தாலும், கட்சி அடிமட்டத்தில் அதன் இருப்பை காட்டுவதற்கு இன்னமும் போராடி வருவதால், ஊடகங்களில் கட்சியைப் பற்றிய பேச்சு கடந்த நான்கு ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நாட்களில் பாஜக பிரதிநிதி இல்லாமல் ஒரு பிரபலமான அரசியல் தமிழ் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை. மேலும், சமீப காலங்களில் பல பெரிய சர்ச்சைகள் பாஜகவைச் சுற்றி வந்துள்ளன அல்லது அந்த சர்ச்சைகளை உருவாக்கிய கட்சி பாஜகதான்.

தேசிய கட்சியான பாஜகவும் தங்கள் பிரச்சாரங்களில் அதிக ஆதாரங்களை முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இது சமூக ஊடகங்களில் திமுக மற்றும் அதிமுக செய்ததை விட அதிகமாக இருக்கலாம்.

உதாரணமாக, வேல் யாத்திரைக்காக கிட்டத்தட்ட ஒரு டஜன் டீஸர் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் படத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோக்களில் ஒன்றில், குறிப்பிடத்தக்க வகையில், உயர்தர எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் இருந்தன. அவை பெரும்பாலும் பாஜக மாநிலத் தலைவரைக் காட்டுகின்றன. தமிழக பாஜக தலைவர் எல் முருகன் கட்சியின் முக்கிய முகமாக இருக்கிறார். கட்சியில் தனது முக்கியத்துவத்தை வலியுறுத்தி, முருக பகவான் மீது கொண்ட பக்தியைக் கொண்டாடி, அவரை தமிழ் இந்துக்களின் மீட்பர் என்று அழைத்தார். இந்த வீடியோக்களில் பெரும்பாலானவை பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார்களின் பாடல் காட்சிகளை ஒத்திருந்தன.

பாஜகவில் அதிக பிரபல முகங்கள்

பாஜக 2014 முதல் மாநிலத்தில் கட்சியில் ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், பிரபலங்கள், அதிகாரத்துவத்தினர், பிற கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் குற்றப் பின்னணியைக் கொண்ட சில தனிநபர்கள் ஆகியோரைக் கொண்டுவந்துள்ளது. சமீபத்தில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு பாஜகவில் இணைந்தது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக உள்ளது.

இந்த பட்டியலில் சமீபத்தியவராக, மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரியை கொண்டுவருவதற்கு பாஜக தலைமை தீவிரமாக தொடர்கிறது. அவர் தொடங்கும் புதிய கட்சியை பாகவில் சேர்க்க முயற்சிப்பது கருணாநிதியின் குடும்பத்தை சங்கடப்படுத்துவதாக இருக்கலாம்.