ஞாயிறு, 8 நவம்பர், 2020

பீகாரில் காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: கருத்துக் கணிப்பு முடிவுகள்

 பீகார் சட்டப்பேரவைக்கு மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டமாக 78 தொகுதிகளில் தற்போது தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 55.73 சதவீத வாக்குகள் பதிவானது. இதனையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின.

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 122 பெரும்பான்மை இடங்கள் தேவைப்படுகின்றன.  3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியாகும்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்:  

டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள்:  நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 116 இடங்களையும் என்றும் , தேஜஸ்வி யாதவ் தலைமயிலான மகா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் 120 இடங்களைப் பெறும் என்றும் தெரிவித்தன.

 

இந்தியா டிவி ஆக்சிஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்: தேஜஸ்வி யாதவுக்கு அடுத்த முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது. இளம் வாக்காளர்களில் 47% பேர்  (18-25 வயது) மகா கூட்டணி கட்சிகளுக்கு  வாக்களித்ததாகக் தெரிவித்தனர். 34% பேர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்ததாகக் கூறினர்.

 

 

50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில், 45% வாக்காளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்ததாகவும், 40% பேர் மட்டுமே  மகா கூட்டணிக்கு வாக்களித்ததாகவும் கூறுகின்றனர்.

 

சிஎன்என்  நியூஸ் 18 – டூடே சாணக்யா கருத்து கணிப்பு முடிவுகள்: தேஜஸ்வி யாதவ் தலைமயிலான மகா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் 180 இடங்களைப் பெறும் என்றும், நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெறும் 55 இடங்களை பெறும் என்றும் தெரிவித்தன.

 

 

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் -ஜான் கி பாத் கருத்துக் கணிப்பு முடிவுகள்: மகா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் 138 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கிறது.

பாஜக வெல்லும்: பீகார் தேர்தலில் பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று  தைனிக் பாஸ்கர் நாளிதழின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. இதுவரை, வெளியான கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்கு சாதகாமான முடிவுகளை இந்த நாளிதழ் மட்டுமே அளிக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் : 120-127

மகா கூட்டணியை சேர்ந்த கட்சிகள்  : 71-81

சிராக் பாஸ்வானின் லோக் சன சக்தி : 12-23

மற்றவை: 19-27