ஞாயிறு, 22 நவம்பர், 2020

2015ம் ஆண்டு பீகார் பொதுத்தேர்தலில் நடந்தது என்ன?

 பீகாரில் 2015ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஜனதா தளம், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. இதில் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக நிதீஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் லாலு பிரசாத்தின் மகனும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

வெற்றி பெற்ற இடங்கள்: (2015)

ஆர்.ஜே.டி எனப்படும் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 இடங்களிலும், ஜனதா தளம் 71 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக- 53; லோக் ஜனசக்தி 2; சிபிஐஎம்எல்-3; அவாமி மோர்ச்சா-1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றன. 

ஆனால் 2017ம் ஆண்டு காங்கிரஸ் - ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி.யு. கூட்டணியில் பிளவு ஏற்பட்டதால் பாஜகவின் ஆதரவுடன் ஜேடியு ஆட்சி அமைத்தது. அதன் முதலமைச்சர் வேட்பாளராக நிதீஷ் குமார் தொடர்ந்தார். 

2020 தேர்தல்:

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியில் ஆர்ஜேடி- 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், இடதுசாரிகள் 19 இடங்களில் போட்டியிட்டுள்ளன. 

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடியூ-115 இடங்களிலும், பாஜக -110 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. 

தனிப்பெரும்பான்மை பெற:


மொத்தமுள்ள 244 சட்டசபை தொகுதிகளில் 122 இடங்களை பெறும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் அட்சி அமைக்கும். இதனால் 144 இடங்களில் போட்டியிடும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி மட்டுமே பெரும்பானமை பெற வாய்ப்புள்ளது. நிதீஷ் குமாரின் ஜனதா தளமோ அல்லது பாஜகவோ அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் கூட்டணி ஆட்சியே அமைக்க முடியும்.