Ghulam Nabi Azad underlines again: Congress needs revamp, leaders have no connect : பீகார் சட்டமன்ற தேர்தலிலும் இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்த பிறகு கட்சிக்குள் எழும் பூசல்கள் குறைவதற்கான வாய்ப்புகளே உருவாகவே இல்லை. கட்சிக்குள் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு கலைந்துவிட்டது. மறுமலர்ச்சியை உருவாக்கவில்லை என்றால் இந்த நிலையில் மாற்றமே ஏற்படாது என்று கூறியுள்ளார்.
மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் ஆசாத் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசும் போது, காங்கிரஸ் நல்ல நிலைமையில் தற்போது இல்லை என்று கூறினார். ஆனால் இதனை சரியான நிலைமைக்கு மாற்றுவது நம்முடைய கையில் உள்ளது என்று கூறிய அவர், மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்குமான உறவு முற்றிலுமாக தொலைந்துவிட்டது என்பதையும் ஒப்புக் கொண்டார். பூத் மட்டத்தில் இருந்து தேர்தல் நடத்தினால் மட்டுமே காங்கிரஸ் மறுமலர்ச்சிக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். கொரோனா தொற்று காரணமாக கட்சி மறுமலர்ச்சிக்கு காலம் ஆனது. ஆனால் அனைத்தும் சரியாக இருக்கின்ற நிலையில், தலைவர்கள் மறுமலர்ச்சிக்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
பீகார் மற்றும் இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை கட்சி ஆராய வேண்டும். தேசிய அளவிலான தலைமையை குறை கூறவில்லை. ப்ளாக் அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் கட்சியை வலுப்படுத்தவில்லை என்றால் நம்முடையை உயராது. இது தான் முதல் நாளில் இருந்து எங்களின் கோரிக்கையாக இருந்தது. இதனை கோருவதன் மூலம், தலைமையின் கரங்களையும் கட்சியையும் வலுவடைய செய்கின்றோம்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் கட்சியை மக்கள் இனிமேல் மாற்றுத்தீர்வாக பார்க்க மாட்டார்கள் என்றும் தலைமை கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வை நோக்கி நகரவில்லை என்றும் குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையில் இது குறித்து பேசியுள்ளார் ஆசாத்.
தேர்தல் காலங்களில் நிலவும் 5 நட்சத்திர கலாச்சாரம் குறித்து பேசிய ஆசாத், தேர்தல் காலங்களில் காங்கிரஸ் மட்டும் அல்ல பாஜகவும் அவ்வாறு நடந்து கொள்கிறது என்று கூறினார். ஆனால் பாஜக கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் டவுன்களில் கூட வேரூன்றி உள்ளது. எனவே அவர்களால் சொகுசாக தலைநகரங்களுக்கு ஹெலிகாப்டர்களில் வந்து இறங்கி ஒரு நாள் தங்கிவிட்டு செல்ல முடியும். நம்முடைய கட்சி அமைப்பு அப்படியாக கிராமங்களிலும் நகரங்களில் மற்ற தேசிய கட்சிகள் அல்லது பாஜகவை வேரூன்றவில்லை. ஹெலிகாப்டரில் வந்து தலைநகரில் தங்கி நம்முடைய நேரத்தை விரையமாக்குவதற்கு பதிலாக நம்முடைய காங்கிரஸ் தலைவர்கள்,பொது செயலாளர்கள், செயலாளர்கள், தாலுகா மற்றும் மாவட்ட அளவில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி ந்ல்ல நிலைமையில் இல்லை. ஆனால் அதனை நல்ல நிலைமைக்கு மாற்றுவது நம்முடைய கையில் தான் உள்ளது. மக்களுக்கும் கட்சிக்குமான தொடர்பு அற்றுவிட்டது ஏன் என்றால் நாம் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட அமைப்பாக செயல்படவில்லை. அந்த அமைப்பே மக்களுடன் நிற்கும் என்று கூறினார். தங்களின் மனதில் பட்டதை பேசும் நபர்களை கலகக்காரர்களாக நடத்தக் கூடாது.
நாங்கள் கலகக்காரர்கள் இல்லை. மறுமலர்ச்சியை வேண்டுபவர்கள். கலகக்காரர்கள் பொறுப்பில் இருக்கும் ஒருவரை நீக்கிவிட்டு அந்த இடத்தை அடைய முயற்சி செய்வார். ஆனால் சீர் திருத்தங்களை கொண்டுவருபவர்களுக்கு தலைமையில் யார் இருந்தாலும் கவலை இல்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் அமைப்பை வலுவாக்குவது தான். மாற்றத்தை வேண்டி நிற்கும் அமைப்பை வலிமைப்படுத்துவதற்காக தான் நாங்கள் இருக்கின்றோம்.
தேசிய அளவில் தலைமையை மாற்றினால் எதுவும் மாறாது. பூத், மாவட்ட, மாநில அளவில் மாற்றங்களை அமைப்பில் கொண்டு வந்தால் தான் இதனை கட்சி வலுவடையும். இந்த அமைப்பு ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின்பு முற்றிலுமாக உடைந்துவிட்டது. இதற்கு இடையே இரண்டு தலைவர்கள் இருந்தாலும் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின்பு கட்சியின் அமைப்பு உடைந்துவிட்டது என்றார்.
தலைமை நீங்கள் சொல்வதை கேட்க தயார் நிலையில் இருக்கிறதா என்று கேட்ட போது, அவர்கள் கேட்க விரும்பவில்லை என்று கூறுவதில் உண்மை இல்லை. எங்களிடம் 5 கோரிக்கைகள் இருந்தன. முழுநேர தலைவர், கட்சிக்கான தேர்தல். இவ்விரண்டும் உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா காராணமாக தேர்தல் சாத்தியப்படவில்லை. அனைத்து மட்டங்களிலும் தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று அவர்கள் கூறவில்லை.
கொரோனா காலத்திலும் பாஜக கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது குறித்து பேசிய போது, அவர்களிடம் சிறப்பு விமானங்கள் உள்ளது. அந்த சொகுசு நம்மிடம் இல்லை என்று கூறினார்.
மேலும் படிக்க : மக்களின் தேர்வாக காங்கிரஸ் இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது – கபில் சிபல்
சோனியா மற்றும் ராகுல் கோவா பயணம் மேற்கொண்டது குறித்து கேட்ட போது, கோவாவிற்கு செல்வது ஒன்றும் தடை செய்யப்பட்டது இல்லையே. கோவாவும் இந்தியாவில் தான் உள்ளது. நான்கு நாட்கள் வெளியூருக்கு தலைவர்கள் சென்றால் உலகம் நடைபெறாமல் நின்று விடாது. அனைத்து மட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருக்கும் பட்சத்தில் தலைவர்கள் எவ்வளவு நேரம் அலுவலகத்தில் இருக்கிறார்கள், வெளியே இருக்கிறார்கள் என்பதெல்லாம் தேவையற்றதாக மாறிவிடும்.
முன்னதாக, இன்று காலையில், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், கட்சியில் தலைமைத்துவ நெருக்கடி இல்லை என்றும், சோனியா காந்தி மற்றும் ராகுல் ஆகியோருக்கு அனைத்து விதமான ஆதரவு வெளிப்படையானது” என்றும் கூறினார். கருத்துக்களை தெரிவிக்க காங்கிரசில் போதுமான மன்றங்கள் இருப்பதாக கூறிய அவர், பி.டி.ஐ-யிடம் “தலைமை என்னைக் கேட்கிறது, எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, ஊடகங்களில் விமர்சிப்பவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது, தலைமை கேட்கவில்லை என்ற இந்த விஷயம் எங்கிருந்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.
சில தலைவர்கள் முழுநேர தலைவர் வேண்டும் என்று கேட்பது குறித்து கேட்டதற்கு, அவர்கள் முன் வந்து கட்சிக்குள் அதைப் பற்றி பேச வேண்டும் என்றார். “தலைவரைப் பார்த்து, நீங்கள் அந்த பதவி இல்லாமல் நன்றாக இல்லை என்று கூறட்டும். இறுதி முடிவை தலைவர் மேற்கொள்ஆர்” என்று குர்ஷித் கூறினார்.