நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில், முதல்வர் பழனிசாமி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வியாழக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகி நகர்ந்து வரும் நிவர் புயல் வியாழக்கிழமை அதிகாலை வரை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதல்வர் பழனிசாமி நவம்பர் 25ம் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் பொது விடுமுறையாக அறிவித்தார்.
அதே நேரத்தில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நிவர் புயலால் அதிக கனமழையும் தாக்கமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.
நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில், முதல்வர் பழனிசாமி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 13 மாவட்டங்களில் 26ம் தேதி வியாழக்கிமை முதவ்வர் பொது விடுமுறை அறிவித்துள்ளார். அதே நேரத்தில், அத்தியாவசியப் பணிகள் நடைபெற அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.