இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பணவீக்கமும், வேலைவாய்ப்பு இன்மையும் அதிகரித்திருப்பதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளமான ட்விட்டரில் ராகுல் காந்தி கருத்து பதிவு செய்துள்ளார். அதில் இந்தியாவில் உள்ள வங்கிகள் கடுமையான சூழலை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார், மேலும் உள்நாட்டு உற்பத்தியும் (GDP) வரலாற்றில் இல்லாத வகையில் சரிவை சந்தித்துள்ளதாகக் கூறிய ராகுல்காந்தி
பொது நம்பிக்கை தினந்தோறும் தகர்க்கப்படுவதாகவும், நசுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சமூக நீதியும் தினந்தோறும் நசுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் நாட்டின் வளர்ச்சி விகிதமும் சிக்கலில் இருப்பதாக விமர்சித்துள்ள அவர், இது வளர்ச்சியா? அல்லது அழிவா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.