சனி, 2 ஜனவரி, 2021

இதை மட்டும் செய்யுங்க… உங்க ஆதார் கார்டை யாரும் ‘மிஸ் யூஸ்’ பண்ண முடியாது!

  இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டை குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) பயனர்களுக்கு பலவிதமான ஆன்லைன் சேவைகளை வழங்குகிறது. அந்த வகையில், யுஐடிஏஐ பயனர்கள் அதன் “சுய சேவை” போர்ட்டலைப் பயன்படுத்தி ஆன்லைனில் தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை பூட்டவோ (Lock) அல்லது திறக்கவோ (Unlock)செய்யலாம். இதன் மூலம் ஆதார் பயோமெட்ரிக்ஸ் பூட்டு தரவைப் பயன்படுத்தி தனிநபரின் அடையாளத்தை அங்கீகரிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் நிராகரிக்ப்படும் என்று UIDAI வலைத்தளம் தெரிவித்துள்ளது.

ஆதார் பயோமெட்ரிக்ஸை எவ்வாறு பூட்டுவது (Lock) / திறப்பது (Unlock)

பயோமெட்ரிக் விவரங்களை பூட்டுதல்

யுஐடிஐஏ சுய சேவை போர்ட்டலின் முகப்பு பக்கத்திலிருந்து “பூட்டு / திற பயோமெட்ரிக்ஸ்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு ஆதார் எண் (யுஐடி) அல்லது மெய்நிகர் ஐடி (விஐடி) போன்ற விவரங்களை உள்ளிட்டு “அனுப்பு OTP” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு யுஐடிஏஐ அனுப்பிய ஓடிபி உள்ளீடு செய்து பயோமெட்ரிக்ஸ் பூட்டலாம். இந்த விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்பு பயோமெட்ரிக் பூட்டப்பட்டது குறித்த தகவலை , யுஐடிஏஐ தகவல் காட்டும்: “உங்கள் கைரேகை அல்லது கருவிழியைப் பயன்படுத்தி நீங்கள் அங்கீகரிக்க முடியாது.

இதில் எந்தவொரு அங்கீகாரத் தேவைகளுக்கும் பயோமெட்ரிக்ஸைத் தற்காலிகமாக திறக்கவோ அல்லது பூட்டவோ செய்யலாம்.

ஆதார் பயோமெட்ரிக்ஸைத் திறத்தல்

யுஐடிஏஐ போர்டல் ஆதார் வைத்திருப்பவர்களுக்கு தற்காலிக அடிப்படையில் தங்கள் ஆதார் பயோமெட்ரிக்ஸைத் திறக்க முடியும். அவ்வாறு திறக்கப்படும் பயோமெட்ரிக்ஸ் விவரங்கள்  10 நிமிட இடைவெளிக்குப் பிறகு தானாகவே பூட்டப்பட்டுவிடும். பயோமெட்ரிக்ஸைத் திறக்க, பயனர் மேலே விளக்கியது போலவே UIDAI போர்ட்டலில் உள்நுழைந்து “திறத்தல்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

பயோமெட்ரிக்ஸ் விவரங்கள் திறக்கப்பட்டதும், “உங்கள் பயோமெட்ரிக்ஸ் இப்போது திறக்கப்பட்டுள்ளது என்று யுஐடிஏஐ போர்டல் செய்தியைக் காண்பிக்கும்.. உங்கள் கைரேகை அல்லது கருவிழியைப் பயன்படுத்தி நீங்கள் அங்கீகரிக்கலாம். இதில் பயோமெட்ரிக்ஸ் தானாக பூட்டப்படும் நேரத்தையும் UIDAI போர்டல் குறிக்கிறது.

பயனர் முடக்கலாம் – அல்லது “நிரந்தரமாக திறத்தல்”

UIDAI போர்ட்டலைப் பயன்படுத்தி ஆதார் பயோமெட்ரிக்ஸ்  பூட்டை முடக்க, பயனர் UIDAI போர்ட்டலில் உள்நுழைந்து முதலில் “திறத்தல்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்த கட்டத்தில், பயனர் உள்நுழைந்து, தேவையான விவரங்களை நிரப்பி, தொடர்ந்து “முடக்கு” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

பயோமெட்ரிக்ஸ் பூட்டு முடக்கப்பட்டவுடன்,: “உங்கள் பயோமெட்ரிக் பூட்டு முடக்கப்பட்டுள்ளது என்று யுஐடிஏஐ போர்டல் செய்தியைக் காண்பிக்கும் உங்கள் பயோமெட்ரிக் பூட்டை எந்த நேரத்திலும் இயக்கலாம். ஆனால் அதற்கு முன் உங்கள் ஆதார் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.”