தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும நிலையில், சென்னையில், மழை பாதிப்பை கண்காணிக்க மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வலிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 3 நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை முக்கிய அமைச்சர்களுடன் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் மேலும் மழை நீடிக்கும் என்பதால், தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் சென்றவர்கள் தற்போது சென்னை திரும்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில். சென்னையில், மழை பாதிப்பை கண்காணிக்க மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ அரசு சார்பி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை மாநராட்சி மண்டலம் 1-க்கு சரவண் குமார் ஜடாவத், மண்டலம் 2-க்கு பி.கணேசன் (9842185758, 044-24952414), மண்டலம் 3-க்கு சந்தீப் நந்தூரி (9940022220, 044-25333555), மண்டலம் 4-க்கு டி.ஜி.வினய் (9342714506, 044-28511210), மண்டலம் 5-க்கு மகேஸ்வரி ரவிக்குமார் (9952553355), மண்டலம் 6-க்கு எம்.பிரதீப்குமார் (9566084473), மண்டலம் 7-க்கு எஸ்.சுரேஷ்குமார் (9445477820, 044-28544545), மண்டலம் 8-க்கு எஸ்.பழனிசாமி (9443176657, 044-25674620),
மண்டலம் 9-க்கு கே.ராஜமணி (9445021688, 044-28522113), மண்டலம் 10-க்கு எம்.விஜயலட்சுமி (9444034855, 044-25676902) மண்டலம் 11-க்கு கே.இளம்பாவத் (9499973445, 044-29510802), மண்டலம் 12-க்கு எல்.நிர்மல்ராஜ் (9443133762, 044-22501158), மண்டலம் 13-க்கு எஸ்.மலர்விழி (9489900200, 044-29520142), மண்டலம் 14-க்கு எஸ்.சரவணன் (8012588602, 044-24311354), மண்டலம் 15-க்கு கே.வீரராகவ ராவ் (8903969999, 044-22501525) நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-rain-zone-wise-ias-officers-appointment-in-tamilnadu-366484/