புதன், 10 நவம்பர், 2021

மழை வெள்ளத்தில் வீடியோ ஷூட்: ‘சிறந்த நிவாரணப் பணி’ என நெட்டிசன்கள் கிண்டல்

 9 11 2021 

மழை வெள்ள பாதிப்புகளுக்கு இடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ ஷூட் நடத்தியதாக வெளியாகி உள்ள வீடியோ நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

சென்னையில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து தமிழக அரசு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. கடந்த 2 நாட்களாக தமிழக முதல்வர் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்கி வருகிறார். இதேபோல் எதிர்கட்சித்தலைவர் மற்றும் பிற கட்சி தலைவர்களும் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது படகு மூலம் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாஜக தலைவர் அண்ணாமலை மழை வெள்ள பாதிப்புகளை படகு மூலம் பார்வையிடுகையில், அதனை வீடியோ எடுப்பதற்காக படகின் பொஷிசனை சரி செய்வதாக வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சிறந்த நிவாரணப்பணி என விமர்சித்து வருகின்றனர்.

Related Posts:

  • மலேசியாவில் மோடி வருகைக்கு கடும் எதிர்ப்பு... தற்போது...மலேசியாவில் மோடி வருகைக்குகடும் எதிர்ப்பு... எந்த நாட்டுக்கு போனாலும்எதிர்புகள் வலுக்கிறது ஆனாலும்மோடிக்கு ரோசம் வந்த மாதிரிதெரியவில்ல… Read More
  • ஷிர்க்' என்றால் என்ன? 1) அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவனை இறைவனாக படைத்தவனாக கருதினால் இது 'ஷிர்க்' 2) நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அல… Read More
  • Hadis யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார்'' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (… Read More
  • சென்னையின் காணாமல் போன நீர்நிலைகள். யானைகளின் இடங்களை நாம் ஆக்ரமித்து விட்டு யானைகள் ஊருக்கு புகுந்து அட்டகாசம் என யானைகளைக் குற்றம் சாட்டுவது போலஏரிகளிலும் ஆறுகளிலும் நாம் புகுந்து … Read More
  • 30 நாடுகளுக்கு மோடி பயணம் செய்தும் ஏற்றுமதி 45% வீழ்ச்சி கண்டது ஏன்? காங்கிரஸ் கடந்த 18 மாதங்களில் 30 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தும், நாட்டின் ஏற்றுமதி 45 சதவிகிதம் சரிவு கண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சா… Read More