சனி, 13 நவம்பர், 2021

இந்துத்துவா – இந்து மதம் இரண்டும் வெவ்வேறு கருத்துகள்: ராகுல் காந்தி

 12 11 2021 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் சமீபத்தில் எழுதிய ‘Sunrise Over Ayodhya’ புத்தகத்தில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) மற்றும் நைஜீரியாவின் போகோ ஹராம் போன்ற குழுக்களின் ‘ஜிஹாதி’ இஸ்லாத்துடன் அரசியல் இந்துத்துவாவை சமமாக வைத்து குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பிய, சில நாட்களுக்குப் பிறகு ராகுல் காந்தியின் இந்த கருத்து வந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் வெறுப்பு சித்தாந்தம் இப்போது காங்கிரஸின் அன்பான மற்றும் தேசியவாத சித்தாந்தத்தை மறைத்துவிட்டதாக வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி ஒப்புக்கொண்டார்.

இந்துத்துவா மற்றும் இந்துயிஸம் (இந்து சமயம்) இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என்றும் அத்தகைய வேறுபாடுகளை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வலியுறுத்தி கூறினார்.

வார்தாவில் வழிகாட்டு முகாமில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்து மதம் என்பது வேறு மதத்தில் நம்பிக்கையுள்ள மக்களைத் துன்புறுத்துகிறதா என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, அதே நேரத்தில் இந்துத்துவா நிச்சயமாக துன்புறுத்துவதைச் செய்கிற்து என்று வலியுறுத்தினார்.

“நமக்குத் தெரிந்த இந்து மதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் என்ன வித்தியாசம்? அவை ஒன்றா? அவை ஒரே மாதிரியாக இருக்க முடியுமா? அவை ஒன்று என்றால், ஏன் அவைகளுக்கு ஒரே பெயர் இல்லை? அவைளுக்கு ஏன் வெவ்வேறு பெயர்கள் உள்ளன? அவைகள் ஒரே விஷயம் என்றால் நாம் ஏன் இந்து மதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், நாம் ஏன் இந்துத்துவா என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை, அவை வெளிப்படையாக வெவ்வேறான விஷயங்கள்” என்று ராகுல் காந்தி கூறினார்.

“மேலும் இவை நாம் ஆராய்ந்து புரிந்து கொள்ளத் தொடங்க வேண்டிய விஷயங்கள்… இந்த வேறுபாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்பவர்கள், இந்த வேறுபாடுகளை சிக்கல்கள், நடத்தைகள், செயல்கள் ஆகியவற்றிற்கு பிரச்னைகளில் பொருத்திப் பார்க்க வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறினார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “இந்து மதமா ஒரு சீக்கியரை அல்லது ஒரு முஸ்லிமை அடித்தது? நிச்சயமாக இந்துத்துவம் தான். ஆனால், இந்து மதமா அக்லக்கைக் கொன்றது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தான் உபநிடதங்களைப் படித்ததாகவும், அப்பாவி மனிதனைக் கொல்ல வேண்டும் என்று சொல்லி அதில் தான் எங்கும் பார்க்கவில்லை என்றும் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தனது சமீபத்திய புத்தகமான ‘Sunrise Over Ayodhya’ இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) மற்றும் நைஜீரியாவின் போகோ ஹராம் போன்ற குழுக்களின் ‘ஜிஹாதி’ இஸ்லாத்துடன் அரசியல் இந்துத்துவாவை சமமாக குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பிய சில நாட்களுக்குப் பிறகு ராகுல் காந்தியின் கருத்துக்கள் வந்துள்ளன.

பாபர் மசூதி – ராமர் ஜென்மபூமி பிரச்சனை மற்றும் அதன் தாக்கம், இந்த விவகாரத்தில் நடந்த சட்டப் போராட்டம், அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து சல்மான் குர்ஷித் தனது புத்தகத்தில், “சனாதன தர்மமும், ஞானிகளுக்கும் புனிதர்களுக்கும் தெரிந்த பாரம்பரிய இந்து மதம், இந்துத்துவாவின் வலுவான வடிவத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்டது. இந்துத்துவாவின் அனைத்து நிலைப்பாடுகளும் சமீபத்திய ஆண்டுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற குழுக்களின் ஜிஹாதிஸ்ட் இஸ்லாமைப் போன்ற அரசியல் வடிவமாக உள்ளது. அரசியல் உள்ளடக்கம் தெளிவாக இருந்ததால், தேர்தல் பிரச்சாரங்களில் இந்த வார்த்தை தவிர்க்க முடியாமல் இடம்பிடித்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் வெறுப்பு சித்தாந்தம் இப்போது காங்கிரஸின் அன்பான மற்றும் தேசியவாத சித்தாந்தத்தை மறைத்துவிட்டது என்பதை வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி ஒப்புக்கொண்டார்.

“இன்று, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் வெறுப்பு சித்தாந்தம் காங்கிரஸ் கட்சியின் அன்பு, பாசம் மற்றும் தேசியவாத சித்தாந்தத்தை மறைத்து விட்டது. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய சித்தாந்தம் உயிர்ப்புடன் இருக்கிறது, அது துடிப்பானது, ஆனால் அது மறைக்கப்பட்டுள்ளது” என்று ராகுல் காந்தி கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-says-hindutva-and-hinduism-are-two-different-concepts-368426/

Related Posts: