காதலிக்க மறுத்ததாக கூறி இளைஞரால் தீவைக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் தோகைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் தன்னை காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதுடன் அந்த மாணவியையும் கொல்ல முயன்றுள்ளார். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் பலத்த தீக்காயமடைந்த மாணவி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதத்தில் செந்தில் என்ற இளைஞர் அந்த மாணவியைக் காதலிக்க முற்பட்டபோது மாணவியின் உறவினர்களால் கைகால் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் செந்தில் குடிபோதையில் இருந்தபோது ரயில் தண்டவாளத்தில் கை,காலை இழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
August 03, 2016 - 11:55 AM
http://tv.puthiyathalaimurai.com/detailpage/district-news/villupuram/121/44862/villupuram-girl-death/C121