ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் கேபிள் கார் கீழே விழுந்த விபத்தில் சுற்றுலாப் பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் குல்மார்க்கில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கேபிள் கார் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நேற்று கேபிள் கார் ஓடிக் கொண்டிருக்கும் போது பலத்த காற்று வீசியதில் பெரிய மரம் சாய்ந்து கேபிள் மீது விழுந்தது. இதில் அந்தக் கேபிள் அறுந்து போனதில் கேபிள் கார் கீழே விழுந்து நொறுங்கியது.
எதிர்பாராத இந்த விபத்தில் அந்தக் காரில் இருந்த டெல்லியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட சுற்றுலாப் பயணிகள் 7பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் விபத்தில் சேதமடைந்த காரில் இருந்த உடல்களை மீட்டனர்.