வெள்ளி, 23 ஜூன், 2017

இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குறியாகும் என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும் ...

குடியரசு தினம் , சுதந்திர தினம்
போன்ற அரசு விழாக்களில் (Parade) அணிவகுப்பு நடத்துவார்கள் ...
ஜனாதிபதி , பிரதமர் , முதல்வர் , மத்திய , மாநில அமைச்சர்கள் , உயர் அதிகாரிகள் காவல்துறை இயக்குனர், ராணுவ அதிகாரிகள் (IAS , IPS) மரணமடைந்து விட்டால் (Parade) அணிவகுப்பு நடத்துவார்கள் ...
ஐபிஎஸ் மாவட்ட கண்காணிப்பாளர்
ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியாளர் , காவல்துறை இயக்குனர் அல்லது சிறைதுறை இயக்குனர் , சிறைதுறை கண்காணிப்பாளர் போன்றவர்களுக்கு (Parade) அணிவகுப்பு நடத்துவார்கள் ...
இந்த சாமியாருக்கு எப்படி (Parade) அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது ?
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக சாமியாருக்கு (Parade) அணிவகுப்பு நடத்த காவல்துறைக்கு மத்திய மாநில அரசுகள் உத்தரவு போட்டதா ?
அல்லது காவல்துறையை மிரட்டி சாமியார் அணிவகுப்பு நடத்தினாரா ?
என சிபிஐ விசாரணை கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்
என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோருகிறோம் ...
மதசார்பற்ற நாட்டில் சாமியார்களுக்கும் சன்னியாசிகளுக்கும் (Parade) அணிவகுப்பு நடத்தினால் இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குறியாகும் என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும் ...
சாமியாருக்கு (Parade) அணிவகுப்பு நடத்திய
காவல்துறை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும் என
இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்...
குறிப்பு:- இந்த சாமியார் யார் எந்த ஊர் என தெரியவில்லை ஆனால் காவல்துறை உடையை பார்த்தால் தமிழக காவல்துறை என்பது உறுதியாக தெரிகிறது...
அன்புடன்
தடா ஜெ.அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்...