ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

உலகின் 15 ஆயிரம் அணு ஆயுதங்கள்! August 19, 2017




உலகின் ஒன்பது நாடுகளில் 15ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகில் அணுஆயுத வல்லமை படைத்த ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, சீனா, வடகொரியா ஆகிய 9 நாடுகளில் 15ஆயிரம் அணு ஆயுதங்கள் உள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யா மிக அதிக அளவாக ஏழாயிரம் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா ஆறாயிரத்து எண்ணூறு அணு ஆயுதங்களை வைத்துள்ளது. பிரான்ஸ் முந்நூறு அணு ஆயுதங்களையும், சீனா 270அணு ஆயுதங்களையும் வைத்துள்ளன. 

பிரிட்டனில் 215 அணு ஆயுதங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 140அணு ஆயுதங்களும், இந்தியாவில் 130அணு ஆயுதங்களும் உள்ளன. இஸ்ரேலில் 80 அணு ஆயுதங்கள் உள்ளன. சுவீடனில் உள்ள உலக அமைதிக்கான ஆராய்ச்சி மையத்தின் கணிப்பைவிட 3மடங்கு அதிகமாக வடகொரியாவில் 60அணு ஆயுதங்கள் உள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related Posts: