ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

எங்களை சீண்டாத வரையில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை” : வடகொரியா August 19, 2017

 “எங்களை சீண்டாத வரையில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை” : வடகொரியா


தங்களின் அணு ஆயுத சோதனைகளைக் கண்டு உலக நாடுகள் பதற்றமடைய வேண்டாம் எனவும், தங்களின் இலக்கு அமெரிக்கா மட்டும் தான் எனவும் வடகொரியா அறிவித்துள்ளது.

வடகொரிய ராணுவம் தொடர்ந்து அணுஆயுத ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.  கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாகவும் அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை தங்களுக்கு இருப்பதாகவும் அண்மையில் வடகொரியா அறிவித்தது.  

அமெரிக்கா இதற்கு கடும் கண்டனத்தையும், ஐ.நாவில் பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தையும் நிறைவேற்றியது .இந்நிலையில் வடகொரியா, அமெரிக்க பசிபிக் கடலை ஒட்டியுள்ள அமெரிக்க ராணுவத்தின் பயிற்சி முகாம் உள்ள குவாம் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இருப்பதாக வடகொரியா தெரிவித்து.இதற்கான விரிவான வரைபடங்களும், விளக்கங்களும் வடகொரியா தெலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குவாம் தீவு மக்கள்மின்றி உலக நாடுகள் அனைத்தும் பதற்றமடையத்தொடங்கின.

இந்நிலையில், வடகொரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ எங்களுடைய அணு ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்காவை குறிவைத்துதான் உருவாக்கப்பட்டுவருகிறது. எனவே, இதனால் உலகின் மற்ற நாடுகள் பதற்றமடைய வேண்டாம். அமெரிக்கா தொடர்ந்து மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்திவருகிறது. எனவே அமெரிக்கா  எங்களை தாக்க முனையும்பட்சத்தில் நாங்கள் எதிர்த்தாக்குதல் நடத்துவோம். எங்களை சீண்டாதவரையில் எந்த ஒரு நாட்டின் மீதும் அணு ஆயுதத்தாக்குதல்களை நடத்த மாட்டோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: