2022 சுதந்திர தினத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளும் மின்சார வசதி பெற்றவையாக மாற்றப்படும் என்று மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
2018 மே மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை 2022க்கு முன்னதாகவே நிறைவேற்ற முடியும் என்று நம்புவதாகவும், நிதிப்பிரச்சனை காரணமாகவே அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதியைக் கொண்டு சேர்க்கும் முயற்சி பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சமீபத்தில் இந்திய மாநிலங்களின் மின் பயன்பாட்டு செயல்திறன் குறித்து அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் மின் விநியோக இழப்பு மற்றும் கடன் சுமை 4.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இது, 2012ல் 2.53 லட்சம் கோடியாகவும், 2013ல் 3.04 லட்சம் கோடியாகவும், 2014ல் 3.60 லட்சம் கோடியாகவும் இருந்தது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.