உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோரக்பூரில் உள்ள BRD மருத்துவமனை எனப்படும் பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, கடந்த 48 மணி நேரத்தில் இவ்வாறு குழந்தைகள் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.
அந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகிக்கும் நிறுவனம், பண நிலுவை காரணமாக நேற்றிரவு முதல் ஆக்சிஜன் வழங்கவில்லை என்றும், இதனால் 20 குழந்தைகள் உடனடியாக உயிரிழந்ததாகவும், இன்று 10 குழந்தைகள் இறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் மூளைத் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.