
டோக்லாம் பகுதியில் இந்திய சீன படைகள் நிறுத்தம் இரண்டு மாதங்களை கடந்து நீடிக்கிறது. விதவிதமான வழிகளில் சீனா இந்தியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. இந்தியா மசிவதாக தெரியவில்லை. இந்நிலையில், ராணுவ பலம் குறித்து பேசி வந்த சீனா தற்போது இந்திய ராணுவத்தை கேலி செய்யும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள சீக்கியர்களைக் கேலிசெய்து சீன செய்தி நிறுவனமான `ஜின்குவா' வெளியிட்டுள்ள அந்த வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளிடையே சுமூக உறவில்லாமல், போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ‘இந்தியா செய்த ஏழு பாவங்கள்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை சீன செய்தி நிறுவனமான ''ஜின்குவா'' வெளியிட்டுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு இந்திய நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.