புதன், 2 ஆகஸ்ட், 2017

காவிரி நீரை மட்டுமே தமிழகம் நம்பியுள்ளதாக தமிழக அரசு முறையீடு! August 02, 2017

காவிரி நீரை மட்டுமே தமிழகம் நம்பியுள்ளதாக தமிழக அரசு முறையீடு!


காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை எனில், தமிழகம் அழியும் அபாயம் உள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் சேகர் நாஃப்டே ஆஜராகி வாதிட்டார். 

மாநிலங்களுக்களுக்கிடையே உள்ள நதிநீர் பிரச்சனையை தீர்ப்பது நடுவர் மன்றத்தின் கடமை என்றும், நடுவர் மன்றம் மட்டுமே நதிநீர் பங்கீட்டை தீர்மானிக்க முடியும் என்றும் கூறினார். தமிழகத்திடம் தெரிவிக்காமல் காவிரியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கர்நாடகா, தண்ணீருக்காக மட்டும் நீதிமன்றத்தை நாடுவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே கூட இல்லாத தண்ணீர் பிரச்சனை, இந்தியாவின் இரண்டு மாநிலங்களுக்கிடையே இருப்பதாகவும் தமிழக அரசின் வழக்கறிஞர் கவலை தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்பதில் ஆரம்பம் முதலே கர்நாடகா உறுதியாக உள்ளதாகவும் சட்டத்தை மதிக்காமல் தன் மனம் போன போக்கில் கர்நாடகா செயல்படுவதாகவும் தமிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நாஃப்டே குற்றம்சாட்டினார்.

Related Posts: