இன்று புவி மேல்பாய்வு தினம். அதாவது, இப்போது இருக்கும் உலகின் வளங்கள் எவ்வளவு இருக்கிறது, மனிதர்கள் அதை எவ்வளவு பயன்படுத்துகிறார்கள், இதே அளவில் பயன்படுத்தினால் உலகின் வளங்கள் எவ்வளவு சீக்கிரம் தீர்ந்துபோகும், மனிதர்களின் எண்ணிக்கை - பூமியின் வளங்கள் ஆகியவற்றிற்கான சமநிலை ஆகியவற்றைக் கணக்கிடும் தினமாகும்.
இதுகுறித்து தேசவாரியான வள பயன்பாடுகளை ஆராயும் சர்வதேச தட ஆய்வு அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, தற்போது மனிதர்கள் உலகின் வளங்களைப் பயன்படுத்தும் விகிதத்தில் பயன்படுத்தினால் இன்றைய நிலையில் நமக்கு 1.7 மடங்கு பூமி கூடுதலாக தேவைப்படும்.
மனிதர்கள் இயற்கை வளங்களை அதிகமாகப்பயன்படுத்தும் விகிதம் 4.5 ஆக தொடர்ந்தால், உலகில் தற்போது இருக்கும் வளங்கள் 2050ல் தீர்ந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு நாடும் எப்படி வாழ்கிறது என்கிற அடிப்படையில் சுவிட்சர்லாந்து இயற்கை வளங்களை தீர்த்துக்கட்டுவதைப் போல வாழ்ந்தால் இன்னும் 3 பூமி நமக்குத் தேவைப்படும். அமெரிக்கா போல வாழ்ந்தால் 5 பூமி தேவைப்படும். இந்தியா போல வாழ்ந்தால் 0.6 மடங்கு பூமி மட்டுமே தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.