வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

​ஆதார் எண் எதற்கெல்லாம் அவசியம்? August 11, 2017

​ஆதார் எண் எதற்கெல்லாம் அவசியம்?


ஆதார் வழக்கில் அடுத்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ள நிலையில் ஆதார் எண் எதற்கெல்லாம் அவசியம் என்பது கூறித்த விவரங்களை இத்தொகுப்பில் காணலாம்.. 
  • மத்திய அரசின் 19 அமைச்சகத்தின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • சிலிண்டர் மானியம், 100 நாள் வேலைத் திட்டம், உணவு மானியம் போன்ற திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 
  • பள்ளிகளில் இலவச மதிய உணவு உண்ணும் குழந்தைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாகும். 
  • விவசாயிகள் பயிர்காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை பெறவதற்கு ஆதார் அவசியம். 
  • வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான இலவச சமையல் எரிவாயு உள்ளிட்ட அரசின் மானிய உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாகும். 
  • டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக மத்திய அரசின் BHIM செயலி பயன்படுத்தவும் ஆதார் முக்கியம். 
  • ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம். 
  • அத்தோடு வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைத் தவிர்க்க பயன்படுத்தப்படுகிறது. 
  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியைப் பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் வங்கி பரிவர்த்தனைகளில் முறைகேடுகளை தவிர்க்க முடியும்.