வியாழன், 17 ஆகஸ்ட், 2017

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் தேசியக்கொடி ஏற்ற அனுமதிமறுத்த கலெக்டர் பணிமாற்றம்! August 17, 2017

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கரன்கியம்மன் பள்ளியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலவை மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பள்ளி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களால் நடத்தப்படும் பள்ளி என்பதால் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், கேரள மாநில பள்ளி விதிகளின் படி, அரசு அதிகாரிகள் அல்லது மக்கள் பிரதிநிதிகள் தவிர வேறு யாரும் பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றக்கூடாது. இதனால், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மேரிகுட்டி அனுமதி மறுத்தார். இதனால், மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்றவில்லை.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆட்சியருக்கு எதிராக குரல் எழுப்பினர். அதேநேரம், ஆட்சியர் மேரிகுட்டியின் நடவடிக்கை பரவலாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆட்சியர் மேரிகுட்டி பணிமாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேரள மாநில அமைச்சக கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பணிமாற்றத்திற்கும், மேரிகுட்டி மோகன் பகவத்திற்கு அனுமதி மறுத்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேரிகுட்டி தன்னுடைய இரண்டரை வருட பணி முடித்திருப்பதன் காரணமாகவே பணி மாற்றம் வழங்கப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேரிகுட்டியும், “இந்த பணிமாற்றம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று’ என்று தெரிவித்துள்ளார்.

Related Posts: