சனி, 9 மே, 2020

உணவில்லாமல் செத்துவிடுவோம் போல் இருக்கிறது” ரயில் விபத்தில் இறந்த தொழிலாளியின் கடைசி போன் கால்!

Aurangabad train accident migrant workers faced hunger last phone call to family members : நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் இன்று 46 வது நாளாக லாக்டவுனில் மக்கள் சிக்கித் தவிக்கின்றோம். புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பெரிதும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (08/05/2020) அதிகாலை 05:15 மணி அளவில், 16 பேர் ஔரங்கபாத் அருகே, சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.

இவர்கள் அனைவரும் மத்திய பிரதேசத்தில் இருக்கும் உமேரியா மாவட்டத்திற்கு செல்ல மகாராஷ்ட்ராவில் இருந்து நடந்தே வந்திருக்கின்றனர். இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த விபத்து குறித்து பேசிய போது, பலியான ஒருவரின் மனைவி கிருஷ்ணாவதி கூறுகையில் “எங்களிடம் பணம் ஏதும் இல்லை. பணம் ஏதாவது இருந்த அனுப்புங்க. காண்ட்ராக்டரும் பணம் தராம திருப்பி அனுப்பிட்டாரு. சோறு தண்ணி இல்லாம, பசி தாகத்துல இறந்து போய்ருவோம் போல இருக்குது” என்று தன்னுடைய கணவர் தன்னிடம் வியாழக்கிழமை இரவு பேசியதாக கூறுகிறார்.
ஆனால் ஏற்கனவே, இங்கே வேலை இல்லாமல் இருந்த காரணத்தால் தான் அவர் அங்கே வேலைக்கு சென்றார். நாங்களும் சோறு தண்ணீர் இல்லாமல் வாடி வருகின்றோம். எங்களிடமும் பணம் இல்லை. அவருக்கு எப்படி என்னால் பணம் அனுப்ப முடியும் என்று வேதனையுடன் செய்தி சேனல்களுக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் போதிய வாழ்வாதாரம் மற்றும் வருமானம் இல்லாத காரணத்தால் அவர்கள் மகராஷ்ட்ராவில் இருக்கும் ஜால்னா மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். இறந்தவர்களின் பெரும்பாலானோர் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்களுடடைய காண்ட்ராக்டர் கடந்த 2 மாதங்களாக இவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. சொந்த ஊர் செல்ல பேருந்து ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்ட போது அவர் காண்ட்ராக்டர் மாயமாகிவிட்டார் என்று தெரிய வந்துள்ளது.

Related Posts:

  • தெரிந்தது கொல்ளவும்......... Read More
  • Hadis அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவரு… Read More
  • வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காய… Read More
  • அல்குர்ஆன் மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்த… Read More
  • அஞ்சலகத்தின் -ஒப்புகை அட்டை வரவில்லையா ஒப்புகை அட்டை வரவில்லையா..... அப்படி நமக்கு ஒப்புகை அட்டை வந்தாலும் அதில் உரிய அலுவலகத்தின் முத்திரை. அதிகாரி கையெப்பம்.தேதி இல்லையா.... அஞ்சலகத்த… Read More