ஊரடங்கிற்கு பின் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகம் உட்பட நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியும் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் பொருளாதார வல்லுநர்கள், தொழில் துறையினர் உட்பட 24 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரசால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்து இந்தக் குழு அறிக்கை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய உயர்நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை மூன்று மாதத்திற்குள் தமிழக அரசிடம் சமர்பிக்கும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
credit NS7.tv