ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

அஸ்ஸாமில் வெள்ளம் - தேசிய பூங்காவில் அழியும் விலங்குகள்! August 19, 2017

​அஸ்ஸாமில் வெள்ளம் - தேசிய பூங்காவில் அழியும் விலங்குகள்!



அஸ்ஸாம் மாநிலம் 10 நாட்களாக வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. பல ஆயிரம் மக்களை பாதித்துள்ள இந்த வெள்ளம், காசிரங்கா தேசிய பூங்காவிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அங்கிருக்கும் அரிய வகை விலங்கினங்கள் இறந்துவருகின்றன.

ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலான 8 நாட்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் 87% காசிரங்கா தேசிய பூங்கா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கிட்டத்தட்ட 300 விலங்குகள் இறந்திருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அரசு அளித்திருக்கும் அறிக்கையின் அடிப்படையில் மட்டும் 18ம் தேதி வரை 185 அரியவகை மான்கள், 19 காண்டா மிருகங்கள் மற்றும் புலிகள் என 225 விலங்குகள் இறந்திருக்கின்றன.
வெள்ள பாதிப்பை பயன்படுத்தி வேட்டைக்காரர்கள் விலங்குகளை வேட்டையாடக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விலங்குகள் அழியாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிரங்கா தேசிய பூங்கா பிரம்மபுத்திரா நதி அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts: