திங்கள், 21 ஆகஸ்ட், 2017

தொடர் மழையால் சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு! August 21, 2017

தொடர் மழையால் சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!


திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் தேக்கங்களின் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. 

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக வட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம் ஏரியின் நீரின் அளவு 127 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 21 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

அதேபோல் புழல் ஏரியில் பூஜ்ஜியமாக இருந்த நீர் இருப்பு 24 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காக 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.