திங்கள், 18 செப்டம்பர், 2017

அபாய எச்சரிக்கையை உணர்த்தும் கருவியை தவறவிட்ட கடலோர காவல்படை அதிகாரிகள்! September 18, 2017

அபாய எச்சரிக்கையை உணர்த்தும் கருவியை தவறவிட்ட கடலோர காவல்படை அதிகாரிகள்!


திருச்செந்தூர் கடல் பகுதியில் அபாய எச்சரிக்கையை உணர்த்தும் வாக்கி டாக்கி போன்ற ஜி.எஸ்.எஸ். கருவி, மீனவர் மூலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து கடலோர காவல்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் கடலோர பகுதியில் கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் இரண்டும் மற்றும் டோர்னியர் ரக விமானம் ரோந்து பணியில் ஈடுபட்டன. திருச்செந்தூர் கோவில் கடல் பகுதியில் கடலோர காவல்படை கப்பலும், சிறிய விமானமும் ரோந்து சுற்று வந்ததை கடற்கரையில் உள்ள பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

கப்பல்களில் பயன்படுத்தும் அவசர காலத்தில் தகவல் அனுப்பும் ஜி.எஸ்.எஸ் கருவி தவறிவிட்டதாகவும், அதை தேடும் பணியில் கப்பலும், விமானமும் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கடல் பகுதியில் 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்க சென்ற ஆலந்தலையை சேர்ந்த ஆல்பர்ட் தலைமையிலான மீனவர்கள், கடலில் அபாயத்தை எச்சரிக்கை செய்யும் மஞ்சள் நிறத்திலான வாக்கி டாக்கி போன்று ஜி.எஸ்.எஸ். கருவியை கண்டெடுத்தனர். இதனை உடனடியாக கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.