கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று அணைகள் நிரம்பியுள்ளதால் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலின் தாக்கத்தால் பலத்த மழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73 அடியாக உள்ளது. சிற்றாறு 1, சிற்றாறு 2 ஆகிய அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் வாழும் மக்கள் பாதுகாப்பான வேறிடங்களுக்குச் செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.