கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் நீர் வடியாததால் உடைந்த மதகை சரிசெய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள கே.ஆர்.பி அணையின் பிரதான முதல் மதகு கடந்த 29-ம் தேதி உடைந்தது. இதையடுத்து அணையை ஆய்வு செய்த முதன்மை பொறியாளர் குழு மற்றும் மத்திய நீர் வள அதிகாரிகள், அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் அளவு 32 அடியை குறைத்த பின்பு தான் அணையின் உடைந்த மதகை சீரமைக்க முடியும் என தெரிவித்தனர்.
இன்றைய நிலவரப்பட்டி அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 36 அடியாக நீர் மட்டம் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணைக்கு 1,618 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.
மதகை சீரமைக்கும் பொருட்டு அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.