சனி, 2 டிசம்பர், 2017

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு விவரம்! December 2, 2017

Image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு தொடர் மழை காரணமாக 5,087 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. 

புழல் ஏரியில் தற்போது 1,612 மில்லியன் கனஅடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு நீர்வரத்து 720 கன அடியாக உள்ளது.
 
செம்பரம்பாக்கம் ஏரியில், அதன் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், தற்போது ஆயிரத்து 850 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து ஆயிரத்து 101 கன அடியாக உள்ளது
 
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில், அதன் மொத்த கொள்ளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கன.அடியில், தற்போது ஆயிரத்து 26 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உயர்ந்துள்ளது. 
நீர்தேக்கத்தின் தற்போதைய 281 கன அடியாக உள்ளது. 
 
சோழவரம் ஏரியில், அதன் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில், தற்போது 599 மில்லியன் கனஅடியாக தண்ணீர் இருப்பு உள்ளது.