திங்கள், 4 டிசம்பர், 2017

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவு வெறிச்சோடியது December 4, 2017

Image

இந்தோனேசியாவில் பாலி தீவு அருகே எரிமலை ஒன்று வெடித்துச் சிதறும் நிலையில் உள்ளது. அதனால், சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி பாலி தீவு வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆகங் என்ற எரிமலையின் சீற்றம் தீவிரமடைந்ததையடுத்து அப்பகுதியை சுற்றிலும் உள்ள மக்களை வெளியேற்றும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்தீவுக்கு உயர்மட்ட எச்சரிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் விடுத்துள்ளனர். 

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பாலி தீவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். இந்தாண்டு எரிமலை சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 

ஆண்டுதோறும் 12 லடசத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் பாலிதீவிற்கு வருகை தருவர். தற்போது எரிமலை சீற்றம் காரணமாக, பாலி தீவிற்கு வந்திருந்த சீன சுற்றுலா பயணிகள் சிறப்பு விமானங்கள் மூலம் கடந்த 3 நாட்களாக திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். 

இதனால் சுற்றுலா பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கடைகள் வெறிச்சோடி காணப்படுவதோடு அவர்களுடைய வியாபாரத்தில் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.  எரிமலையில் இருந்து தொடர்ந்து சாம்பல் துகள்கள் வெளியேறுவதால் எந்நேரத்திலும் எரிமலை வெடிக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.