வியாழன், 7 டிசம்பர், 2017

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு! December 7, 2017

Image

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், 59 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட, 145 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில், நடிகர் விஷால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா உட்பட, 73 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

இதனிடையே, மனுவை வாபஸ் பெற கடைசி நாளான இன்று, 13 சுயேட்சைகள் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். 

இதையடுத்து, 59 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இத்தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.