ராஜஸ்தானில் லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாகக் கூறி இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உதய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஐ.ஜி. ஆனந்த் ஸ்ரீவத்சவ், இதனைத் தெரிவித்தார்.
உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ராஜ்சாமாந்த் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றதாகவும், அது வீடியோவாக எடுக்கப்பட்டு, வைரலாகப் பரவியதாகவும் ஆனந்த் ஸ்ரீவத்சவ் தெரிவித்துள்ளார். வீடியோவை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய ஆனந்த் ஸ்ரீவத்சவ், அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதனிடையே, ராஜஸ்தானில் லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டதற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிருந்தா கரத், மேற்கு வங்கத்தில் இருந்து பிழைப்புக்காக வந்த இளைஞரை லவ் ஜிகாத் என்ற பெயரில் எரித்துக் கொன்றது கொடூரமான குற்றம் என கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற சங்க பரிவார இயக்கங்கள் நாட்டில் ஏற்படுத்தி வரும் மதவாத சூழலே இதுபோன்ற வன்முறைகளுக்குக் காரணம் என்றும் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த கொடூரா கொலைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.