வியாழன், 7 டிசம்பர், 2017

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு December 7, 2017

Image

தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதிசையில் நகர்ந்து ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினத்தில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,  நேற்று தென் கிழக்கு வங்க கடல்பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட திசையில் நகர்ந்து ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினத்தில் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்தார். 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் நகர்ந்து வட ஆந்திரா மற்றும் ஒடிசாவை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் மீனவர்கள் வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதி மற்றும் தமிழக வட கடற்கரை பகுதிகளுக்கு வரும் 7-ம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டார். 

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.