வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு நீட்டிக்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்குள் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அதில் தளர்வு அளிக்க முடியாது என கூறினார்.
செல்போன், வங்கி கணக்கு உள்ளிட்டவற்றில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்று மனுதாரரர்கள் குறிப்பிட்டனர்.
இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்த வழக்குகளை, அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வு அடுத்த வாரம் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனத் தெரிவித்தனர்.