திங்கள், 5 மார்ச், 2018

யாரேனும் கம்யூனிஸட்கட்சிகாரன் இருக்கிறீர்களா? என்னை காப்பாற்ற வருவீர்களா என்று?



திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்த்தற்கு மகிழ்ச்சி அடைவோருக்கும்,மதங்களாய் கைகோர்த்தவர்களுக்கும் ஜெர்மன் நாட்டு கவிஞன் மார்ட்டின் நீம் முல்லர் ஹிட்லர் காலத்தில் மக்கள் வேட்டையாடப்பட்டதை கம்யூனிஸ்டுகள் எதிர்த்து நின்றபோது மக்களின் மனோபாவமும்,யதார்த்தமும் எப்படி இருந்த்து என்பதை சொல்லியிருப்பதை எனக்கு நினைவூட்டுகிறது.
ஹிட்லரின் துப்பாக்கிகள் யூதனை வேட்டையாடியது.கம்யூனிஸ்டுகாரன் கத்தினான் வாருங்கள் ஒன்றுகூடி எதிர்ப்போம் என்றான்.நான் யூதன் இல்லையே கிறித்துவ பாதிரியன்றோ.அடுத்து தொழிற்சங்க வாதிகளை வேட்டையாடும் போதும் சிவப்புகொடிகாரன் கத்தினான் இப்போதாவது வாருங்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம் என்று.நான் தொழிற்சங்க வாதியில்லையே வெள்ளை உடை தரித்த பாதிரிதானே என்றேன்.அடுத்து கத்தி,கத்தி கூப்பாடு போட்ட கம்யூனிஸ்டுகாரன் வேட்டையாடப்பட்டான்.இப்போதும் சிவப்பு கொடிகாரன் கத்தினான் வித்தியாசமாக.எங்களை காக்க நீங்கள் வரமாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும்.நீங்கள் யாரென்பதையும் நாங்கள் அறிந்து கொண்டோம்.உங்களையாவது நீங்கள் காத்து கொள்ளுங்கள் என்று கூறி உயிர்விட்டான்.அவனுக்காக நானர பரிதாபம் மட்டுமே பட்டேன்.சந்தோசமும் பட்டேன்.நல்லவேளை நான் கம்யூனிஸ்ட் இல்லையே என்றும்,நான் மத வாதியாக்கும் என்றும்.கடைசியாக ஹிட்லர் என்னை நோக்கி திரும்பினான் .இப்போது நான் கத்த தொடங்கினேன். யாரேனும் கம்யூனிஸட்கட்சிகாரன் இருக்கிறீர்களா? என்னை காப்பாற்ற வருவீர்களா என்று?

Related Posts: