மாநிலங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடக்கும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அரசியல் கொள்கைகள், கருத்துகள் பேசக்கூடாது என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரிகள் நடத்தும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சிறப்பு அழைப்பாளர்கள் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சி அல்லது இயக்கங்களின் கொள்கைகளை தங்களின் உரைகளில் கலந்து பேசுவதாக தெரியவருவதாகவும், இது போன்ற நிகழ்வுகள் கல்வி கற்கும் மாணாக்கர்களுக்கு இடையூறாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே இதுபோன்று கல்லூரிகளில் நடக்கும் விழாக்கள், நிகழ்ச்சிகளை அனுமதிக்க வேண்டாம் என அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் மற்றும் அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுவதாக கல்லூரிக் கல்வி இயக்குநர் மஞ்சுளா தெரிவித்துள்ளார். மேலும் இது அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை வயிலாக தெரிவிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தொடர்ந்து கல்லூரி விழாக்களில் கமல் போன்று புதுக்கட்சி தொடங்கியவர்கள் தங்களின் கொள்கைகள் மற்றும் அரசுக்கு எதிரான கருத்துகளை பேசி வருவதால், அரசு இதுபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.