உலகிலேயே அதிக காற்று மாசுபாடு நிறைந்த நகரங்களின் பட்டியில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பிடித்திருப்பது இந்தியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
2016-ம் ஆண்டு காற்று மாசுபாடுள்ள 4,300 நகரங்களை கண்காணித்த உலக சுகாதார நிறுவனம், அதிக மாசுபாடுள்ள 15 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர், வாரணாசி, லக்னோ, ஆக்ரா, முஷாஃபர்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் காற்று மாசு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்பூர் முதலிடத்தில் உள்ள நிலையில், ஃபாரிதபாத், வாரணாசி, காயா, பாட்னா, டெல்லி, லக்னோ நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆக்ரா, முஷாபர்பூர், ஸ்ரீநகர், குர்கான், ஜெய்ப்பூர், பாட்டியலா, ஜோத்பூர் நகரங்கள் முதல் 14 இடங்களை பிடித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்த 14 நகரங்களில், உ.பி. மாநிலத்தை சேர்ந்த 5 இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிக காற்று மாசுபாட்டல் 10-ல் ஒன்பது பேர் பாதிக்கப்படுவதாகவும், இதனால் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
மிக அதிக காற்று மாசுபாடுள்ள 15 நகரங்களின் பட்டியல்
1)கான்பூர் (உ.பி.)
2)ஃபாரிதபாத் (ஹரியானா)
3)வாரணாசி (உ.பி.)
4)காயா (பீகார்)
5)பாட்னா (பீகார்)
6)டெல்லி
7)லக்னோ (உ.பி.)
8)ஆக்ரா (உ.பி.)
9)முஷாபர்பூர் (உ.பி.)
10)ஸ்ரீநகர் (காஷ்மீர்)
11)குர்கான் (ஹரியானா)
12)ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
13)பாட்டியலா (பஞ்சாப்)
14)ஜோத்பூர் (ராஜஸ்தான்)
15)அலி சுபா - அல் சேலம் (குவைத்)