
இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளம் தடகள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்கள் நீளம் தாண்டுதல், ஆண்கள் மற்றும் பெண்கள் ட்ரிபிள் ஜம்ப், 100 மீட்டர் தடை தாண்டும் போட்டி, 1500மீ ஓட்டம், ஈட்டி எரிதல் போன்ற பிரிவுகளில் புதிய போட்டி சாதனையுடன் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் இத்தொடரில் அதிக தங்கப் பதக்கங்கள் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.
இப்போட்டியில் 20 தங்கம், 22 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என 50 பதக்கங்களை அள்ளிய இந்திய அணி முதல் இடத்தையும், 12 தங்கம், 10 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் வென்ற இலங்கை 2வது இடத்தையும், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் வென்று பாகிஸ்தான் 3வது இடத்தையும் பெற்றுள்ளன.
இது தவிர வங்காளதேசம் இரண்டு வெண்கலம் மற்றும் மாலத்தீவுகள் ஒரு வெண்கலமும் வென்றுள்ளன.
முன்னதாக ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் இந்திய வீரர்கள் கமல்ராஜ் கனகராஜ் 16.05 மீ தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கத்தையும், பெண்கள் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் 12.90 மீ தாண்டி பிரியதர்ஷினி சுரேஷ் புதிய போட்டி சாதனையுடன் தங்கத்தையும், ஈட்டி எரிதலில் சஞ்சனா சவுத்ரி 48.08 மீ தூரம் வீசி புதிய போட்டி சாதனையையும் படைத்து அசத்தினர்.