சனி, 1 பிப்ரவரி, 2020

ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 3வது மாதமாக ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

credit ns7.tv


ஒவ்வொரு மாத தொடகத்திலும் முந்தைய மாத ஜி.எஸ்.டி வசூல் விவரங்களை நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இன்று மத்திய பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் நேற்றுடன் முடிவடைந்த ஜனவரி மாத ஜி.எஸ்.டி வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
பல வரிகளுக்கு மாற்றாக ஒரே வரி என்ற தாரக மந்திரத்துடன் கடந்த 2017ம் ஆண்டில், ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிமுறை நாட்டில் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாத ஜி.எஸ்.டி வருவாய் 1,10,828 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 
இதில் மாநில வருவாய்களின் பங்கு ரூ.28,801 கோடி, மத்திய அரசின் வருவாய் பங்கு ரூ.20,944 கோடி, மாநில அரசுகளின் வருவாய் பங்கு ரூ. 28,224 கோடி, ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (IGST) ரூ.53,013 கோடி, செஸ் ரூ.8,637 கோடி ரூபாயாக உள்ளது.
GSTR 3B ரிட்டர்ன்களின் எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதியுடன் 83 லட்சமாக உள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 3வது மாதமாக ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1.02 லட்சம் கோடியாக ஜிஎஸ்டி வசூல் இருந்தது குறிப்பிடத்தக்கது.