வியாழன், 4 ஜூன், 2020

பளபளன்னு மிருதுவான ஸ்கின் வேணுமா? சிம்பிள் டிப்ஸ்

தேங்காயை உடைத்து அதன் பருப்பை உலர வைத்து அதிலிருந்து எடுக்கப்படும் தேங்காய் எண்ணெயை தென்னிந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும். ஆனால் இது அழகு நன்மைகளையும் கொண்டுள்ளது. கரோனா காரணமாக அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா ஆகியவற்றுக்கு செல்ல முடியாமல் நாம் வீட்டிலேயே முடங்கி இருக்கும் போது வீட்டு வைத்தியங்கள் நமது மீட்புக்கு வருகிறது.

பொதுவாக, நம் அனைவருக்கும் நம்முடைய சருமத்திற்கு என்று வரும்போது நாம் நம்பும் அழகு சாதன பொருட்கள் உள்ளன. ஆனால் சில இயற்கை பொருட்கள் உள்ளன, அவற்றை சிறிய அளவில் பயன்படுத்தினால் அனைத்து தோல் வகைகளுக்கு பொருந்தும். அவற்றில் ஒன்று தான் தேங்காய் எண்ணெய். இதில் ஊட்டமளிக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே இது நமது தோலை ஹைட்ரேட் (hydrate) செய்யவும் பாதுகாக்கவும் உதவும். இதில் லினோலிக் அமிலம் (linoleic acid) மற்றும் ’வைட்டமின் F ’ ஆகியவையும் அடங்கியுள்ளது. ’வைட்டமின் F ’ தோலின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். லினோலிக் அமிலத்தில் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இதை ஒரு நாள் இரவு முழுவதும் முகத்தில் தடவி இருந்தால் அதிக நன்மைகளைப் பெறலாம். எந்த இரவு சீரம் (serum) போலவும் நீங்கள் மாற்றாக உங்கள் முகத்தில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை காணலாம்.

 

நன்மைகள்

* உங்களுக்கு உலர்ந்த, மெல்லிய தோல் இருந்தால், வழக்கமான மாய்ஸ்சரைசருக்கு பதில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாக்கி ஹைட்ரேட் செய்யும். மேலும் சருமத்தை புத்துணர்ச்சியுடனும் மென்மையாகவும் வைத்திருக்கும். மேலும் இது உங்கள் சருமத்தை நீண்ட நேரம் ஹைட்ரேட் செய்து மென்மையாக வைத்திருக்கும்.
* ஈரப்பதத்தை உள்ளே தக்க வைத்து சருமத்திற்கு பாதுகாப்பு அறனாக இருக்கிறது. இது சருமத்தை மிருதுவாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
* எரிச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது
* இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது தோல் உறுதியையும் நெகிழ்ச்சியையும் பராமரிக்க உதவுகிறது. மேலும் இது சில நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை உருவாவதை அகற்றுகிறது.
* இது தழும்புகள் மற்றும் திட்டுகளை குறைக்கிறது.