தமிழ் தொலைக்காட்சி விவாதத்தில் பேராசிரியை சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் இடையிலான மோதல், நாகரீக எல்லையைக் கடந்தது. இருவரும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை உதிர்த்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் இரு தரப்பு மோதலாக உருமாறியது.
காட்மேன் என்கிற வெப் சீரிஸின் டிரெயிலர் அண்மையில் வெளியானது. இது பிராமணர் சமூகத்தை இழிவுபடுத்துவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து மேற்படி வெப் சீரிஸை வெளியிடுவதை நிறுத்தி வைப்பதாக சம்பந்தப்பட்ட டி.வி நிர்வாகம் அறிவித்தது. அதேசமயம் மேற்படி வெப் சீரிஸ் தயாரிப்புக் குழுவினரோ, இது கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதல் என புகார் கூறினர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாலைமுரசு தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி புதன்கிழமை (ஜூன் 3) இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திராவிட இயக்கச் சிந்தனையாளரான பேராசிரியை சுந்தரவள்ளி, இந்து இயக்கப் பிரமுகரான ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேராசிரியை சுந்தரவள்ளி, பிராமண சமூகப் பெயரைக் குறிப்பிட்டு பேச ஆரம்பித்ததும், அதற்கு ராம ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். ‘நானும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிப்பிட்டு பேசலாமா?’ என இடைமறித்தார் ராம ரவிக்குமார். ‘உங்க நேரம் வரும்போது நீங்க பேசுங்க. இப்போ குறுக்கிடாதீங்க’ என்றார் சுந்தரவள்ளி.
சரியான செருப்படி பதில்.
இனி எவனாவது விவாதங்களின் முறை இல்லாமல் பேசுவானா.!! ராயில் சலிட் தோழர் @Sundaravalli_
தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பேசலாமா? எனக் கேள்வி எழுப்பியபடி இருந்தார் ரவிக்குமார். அதற்கு, ‘நான் என்ன பேசணும்னு நீங்க முடிவு பண்ண முடியாது. உங்க நேரத்தில் நீங்க என்ன பேசணுமோ, பேசுங்க’ என்றார் சுந்தரவள்ளி. ஒருகட்டத்தில், ‘நாம் தமிழர் கட்சியினர் உங்களை கேள்வி கேக்குறாங்கல்ல. அதுக்கு பதில் சொல்லத் துப்பில்லை’ என்றார் ராம ரவிக்குமார்.
இதைத் தொடர்ந்து சுந்தரவள்ளி சற்றே ஆத்திரமாக சில வார்த்தைகளைப் பேச, பதிலுக்கு ராம ரவிக்குமாரும் எகிற… விவாத நிகழ்ச்சி நாகரீக எல்லையைத் தாண்டியது. இருவருமே எழுத்தில் வடிக்க முடியாத வார்த்தைகளை உதிர்த்தனர். நெறியாளர்களால் இருவரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அருகில் இருந்த இதர பங்கேற்பாளர்கள் எதுவும் செய்ய முடியாமல் தடுமாறினர்.
ஈ.வெ.ராமசாமி பேசிய பெண்ணியம் என்பது என்ன?
விளக்குகிறார் டோலர் சுந்தரவள்ளி
"சா____ன் இருக்காது அறுத்துடுவேன்.."@Sundaravalli_ twitter.com/ramu_seenivasa …
இதோடு இந்த விவகாரம் முடியவில்லை. இவர்களில் பேச்சுகள் அடங்கிய வீடியோ தொகுப்பை சமூக வலைதளங்களில் இரு தரப்பினரும் பகிர்ந்து மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள்.
அண்மையில்தான் பாஜக.வின் கரு நாகராஜன், காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி இடையிலான தொலைக்காட்சி நேரலை மோதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குள் இப்போது சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல். இது எங்கே போய் நிற்குமோ?