கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இந்நோய்க்கு மருந்து தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் முறையாக மருந்துகள் ரெடியாக அடுத்த வருடம் ஆகிவிடும். தொடர்ந்து பலரும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் தன்சானிய நாட்டின் அதிபர் ஜான் முகுஃபுலி “கொரோனா எனும் சாத்தானின் வேலையை ஒடுக்கிவிட்டோம். தன்சானியா தற்போது முழுமையாக கொரோனாவில் இருந்நு முற்றிலும் மீண்டுவிட்ட நாடாக மாறியுள்ளது. எல்லாம் கடவுளின் அருளால் நடைபெற்றது” என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஏப்ரல் 29ம் தேதிக்கு பிறகு உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின் படி நோய் பரவல் குறித்த டேட்டாக்களை வெளியிடவில்லை அந்நாடு.
தற்போது வெறும் 4 நபர்கள் மட்டுமே கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நாட்டில் கொரோனா நோய் 509 பேருக்கு ஏற்பட்டிருந்தது. 29 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.