கோவிட் -19 பாதித்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதால் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது காலத்தின் தேவை.
* தேவையான நீரைப் பருகுங்கள், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பச்சையான காய்கறி மற்றும் பழங்களை உண்ணுங்கள்.
”தினசரி உட்ற்பயிற்சி செய்யுங்கள், வீட்டில் நடவடிக்கைகளை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு அழுத்தம் தராத உடற்பயிற்சிகளை செய்யுங்கள், யோகா, பிராணாயாமம், அழ்ந்த மூச்சு பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் சுவாசத்தில் எந்த இடையூறும் ஏற்படுத்தாது. சிறு சிறு வீட்டு வேலைகளான வீடு பெருக்குவது, வீட்டை துடைப்பது மற்றும் சுத்தம் செய்வது ஆகியவற்றை செய்யலாம்”, என மும்பை ACI Cumballa Hill மருத்துவமனை நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் Anil Boraskar பரிந்துரைக்கிறார்.
* இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை நம்பகமான இயந்திரங்களான home glucose monitoring மூலம் வீட்டிலேயே சோதித்துப் பார்க்கலாம்.
* உங்களுக்கு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இருந்தால், உங்கள் இரத்த அழுத்த அளவை அவ்வப்போது கண்காணித்து மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
* கைகளை கழுவுவது போல கால்களை கழுவுவதும் மிக முக்கியமானது. அவற்றை தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.
* நல்ல தனிமனித சுகாதாரத்தை பேணுங்கள். உங்கள் தோல், வாய் மற்றும் பிற உறுப்புகளின் சுத்தத்தையும் பராமரியுங்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள்.