திங்கள், 8 ஜூன், 2020

சர்ச்சில் சிலை மீது இனவெறியர் என எழுதி கருப்பின மக்கள் போராட்டம்!

அமெரிக்காவில் கருப்பினத்தவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டதற்கு எதிப்பு தெரிவிக்கும் விதமாக இங்கிலாந்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் மினஸ்சோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரத்தில் கடந்த மாதம் கருப்பினத்தை சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த 4 காவல்துறையினர், பொது இடத்தில் கருப்பினத்தவரின் கழுத்தின் மீது தங்களது கால்களை மடக்கி தாக்குதல் நடத்தினர். இதில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.  இதனை தொடர்ந்து இந்த இனவெறி தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கருப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் நாடாளுமன்ற சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக குவிந்த ஏராளமான கருப்பின மக்கள் இனவெறி தாக்குதலை கண்டித்தும் கருப்பினத்தவருக்கு சம உரிமை வழங்கக் கோரியும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதனை தொடந்து இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை அருகே ஆர்பாட்டம் நடத்திய கருப்பின மக்கள் அவரது சிலையில் இனவெறியர் என எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் எட்வார்ட் கோல்ஸ்டனின் சிலையும் தப்பவில்லை. எட்வர்ட் கோல்ஸ்டன் 17 ஆம் நூற்றாண்டின் உள்ளூர் அடிமை வர்த்தகர்., இவர் இங்கிலாந்தில் அடிமை வர்த்தகத்தில் இருந்து கணிசமாக லாபம் ஈட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அவரது சிலையை கயிறு மூலம் கட்டி  கீழே தள்ளிய போராட்டக்காரர்கள் தெருக்களில் கோல்ஸ்டனின் சிலையை இழுத்துச் சென்றனர். பின்னர் அவரது சிலை அவான் நதியில் வீசப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது பல காவலர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “மக்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு ஆனால் காவல்துறையைத் தாக்க அவர்களுக்கு எந்த உரிமை இல்லை என தெரிவித்தார். கொல்ஸ்டன் சிலை கீழே இழுக்கப்பட்டு ஆற்றில் வீசப்படுவதைத் தடுக்கவில்லை பிரிஸ்டலில் உள்ள காவல்துறையினர் பாதுகாத்தனர் என தெரிவித்தார்.  ஆனால் இது ஒரு குற்றச் சேதச் செயல் என தெரிவித்துள்ள அவர், இதில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.